திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி ஊக்குவிப்பதும், கௌரவிப்பதும் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட துறையினருக்கும் உலகம் முழுவதும் உள்ள இணையதள பார்வையாளர்களுக்கும் நன்கு அறிமுகமான’ டூரிங் டாக்கீஸ்’ எனும் நிறுவனம் – ‘ ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருதை வழங்க திட்டமிட்டு இருக்கிறது. விருதுகள் தரமான கலைஞர்களை சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் […]

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’

நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், பொமன் இரானி, மாளவிகா மோகன், நிதி அகர்வால், ரீத்தி குமார் , ஜரினா வஹாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் […]

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ வெளியாவதில் சிக்கல்…

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையில் ‘வா வாத்தியார்’ வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வருவதால் ரசிகர்கள் கடுமையான அப்செட்டில் உள்ளனர். கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையில் அவருடைய நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தினை ரிலீஸ் […]

டொராண்டோவில் நிலப்பரிமாற்ற வரியை உயர்த்த தீர்மானம்?

டொராண்டோ மாநகரில் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு வீடுகளை வாங்குபவர்களுக்கான, நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்துவதற்கு டொராண்டோ மாநகர சபை ஒப்புதல் அளித்துள்ளது. மாநகர சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 17-க்கு 7 என்ற விகிதத்தில், இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம் நகரின் பெரும் பணக்காரர்களிடமிருந்து கூடுதல் நிதியைத் திரட்டி, சாதாரண மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) திட்டமிட்டுள்ளார். இந்த புதிய வரி […]

2017 இல் கனடா கியூபெக்கில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் குறித்த இறுதி அறிக்கை!

கியூபெக் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற 7 வயது சிறுமியின் மரணம் குறித்து, மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளார். “இது ஒரு திட்டமிட்ட படுகொலை மட்டுமல்ல, அந்தச் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வி” என்று அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 26 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் […]

கனடாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற இலக்கை எட்ட முடியாது?

ஒட்டாவா, கனடா — 2030-ஆம் ஆண்டிற்குள் கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, எட்ட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா சுற்றுச்சூழல் துறை (ECCC) தனது அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியை மட்டுமே கனடாவால் தற்போதைய சூழலில் எட்ட முடியும் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அரசு, தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த அறிக்கை, […]

கண்டி – நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) வரை செல்லுபடியாகும் எனவும் அந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டொவிட்ட அசங்கவின் ஆதரவாளர் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் கைது

தெஹிவளை விளையாட்டு மைதானத்துக்கருகில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பட்டொவிட்ட அசங்கவின் நெருங்கிய ஆதரவாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த பிரதான துப்பாக்கிதாரி மேல்மாகாண (தெற்கு) குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனரதன வீதிப் பகுதியில் உள்ள ‘ஏ’ குவாட்டர்ஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த இரு சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் […]

119 என்ற அவசர இலக்கம்; பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸ்துறையினர் விடுத்துள்ளனர். 119 அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அழைப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, உடனடி பொலிஸ் நடவடிக்கை தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்த அவசர சேவை தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன. தவறான முறைப்பாடுகள் மற்றும் பிற அவசர சேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் இந்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தெரிவிக்கப்படுகின்றன. அவசரகாலத்தில் பொலிஸ் 119 அவசர […]

யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல்

யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை […]