உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் ஒன்று கூடிய குடும்ப உறுப்பினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸ் மா அதிபரினால் ஐந்து வருடங்களுக்கு மேல் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் வசிப்பவர்கள் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அவற்றை ஒப்படைக்குமாறு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் ஒன்றை கையளிக்க வந்திருந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதியின் பிரதிச் […]

யாழ்.மாநகரசபை காணியை அபகரித்தவர் அகப்பட்டார்!

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அத்தோடு, மாநகரசபைக்கு சொந்தமான காணியை தவறான உறுதி முடித்து தனிநபர் ஒருவர் தனதாக்கி கொண்டுள்ளதாக சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த காணி சம்பந்தமான சகல ஆவணங்களையும் […]

இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் – சங்கக்கார

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், “மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய உந்து சக்தியாக இலங்கைக்கு உள்ளது. இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்கு வர வேண்டும். அனைவருக்கும் இலங்கை திறந்திருக்கும். இலங்கை பாதுகாப்பானது. உங்களை வரவேற்க நாடு தயாராகவுள்ளது. உங்கள் வருகை இலங்கையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக […]

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை […]

முதலிடத்தில் எலான் மஸ்க்!

600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் படைத்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனக்கு 1 ட்ரில்லியன் டொலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் அண்மையில் கோரிக்கை […]

‘உலகளாவிய கிளர்ச்சி’ முழக்கத்தை எழுப்புபவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள் அல்லது அது தொடர்பான பதாகைகளை ஏந்துபவர்களைக் கைது செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மான்செஸ்டர் யூத வழிபாட்டுத் தலத் தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இத்தகைய முழக்கங்கள் வெறுப்பைத் தூண்டும் செயலாகக் கருதப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து […]

சிட்னி தாக்குதல் பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்டார்!

ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில், கடந்த 14ம் தேதி ஹனுக்கா என்ற யூத பண்டிகையின்போது பொதுமக்கள் மீது இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 16 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியது சாஜித் […]

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும். இரு நாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றுவதில் ரஷ்ய அதிபர் புடின் பிடிவாதமாக இருந்து வருகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஏதும் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய […]

ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்

உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் நிலப்பகுதி விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை என புடின் தெளிவுபடுத்தினார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய போது புடின் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் ஐரோப்பிய கூட்டாளிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தேவையானால் பலவந்தமாகவே […]

சிம்பு -ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி?

சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது கோவில்பட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அப்படத்தை தொடர்ந்து சிம்பு முன்னணி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக வந்த தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்து […]