தொழில்நுட்பக் கோளாறு; சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கி விமானம்
தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானத்தின் எரிபொருளை வானத்தில் குறைத்த விமானி அதனை சமர்த்தியமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 202 பயணிகளுடன் தரையிறக்கினார்.. லேண்டிங் கியர் வேலை செய்யாத நிலையில் அதனை சமாளித்து விமானி இந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியமை குறிப்பிடத்தக்கது.