ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டி?

இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உறுதிப்படுத்தினார். “முன்னர் இரண்டு தேர்தல்களுக்கு மட்டுமே எனது ஆதரவை நான் உறுதியளித்தேன். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களில் பிரேமதாச சில பின்னடைவுகளைச் சந்தித்தார். எனவே, நியாயமாகவும் தற்போதைய எதிர்க்கட்சி நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டும், அவர் போட்டியிடுவதற்குத் தகுதியானவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,” என்றார்.

கீரி சம்பாவை ‘பாஸ்மதி’ என விற்ற வர்த்தகருக்கு அபராதம்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை, நாலந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நாவுல நீதவான் […]

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகளில் வெளிப்படைத்தன்மை?

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத் தன்மையுடனேயே கையாளப்பட்டு வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. […]

முன்னாள் சபாநாயகரின் பட்டச் சான்றிதழ் குறித்து

  முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து மோசடி செய்திருந்தால், அவர் மீது தேசிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கலாநிதிப் பட்டம் தொடர்பான சான்றிதழை விரைவில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கட்சிக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை அதைச் செய்யவில்லை. அவர் தனது கலாநிதி பட்டம் குறித்து […]

பாதிக்கப்பட்ட மலையக மக்களின் நல வாழ்வு குறித்து கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் மலையகப் பகுதிகளில் ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறித்து கனடிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர் சமூகங்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போதெல்லாம் தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் […]

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெரு விழா

வருடந்தோறும் இடம்பெறுகின்ற வடக்கு பண்பாட்டு பெரு விழாவில் பல்வேறு துறைகளில் நூல்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கவிதை ,சிறுகதை, ஆய்வு, சூழலியல், என பலதுறைகளில் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு வருது வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது. பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் செவ்வாய்க்கிழமை […]

அநுரவுக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் புனரமைப்பு பணிகளில் நடைபெறுவதாக தெரியவில்லை எனவும் இதன் காரணத்தால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்தோடு, நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முடிந்தளவு நிவாரண நிதிகளைப் பெற்று புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண பொதுச்சேவைக்கு விண்ணப்பங் கோரல்

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண அலுவலகப் பணியாளர் சேவை (தரம் – III) வடக்கு மாகாண பொதுச்சேவையின், மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம் III இற்கான வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன. பதவி: மாகாண அலுவலகப் பணியாளர் (தரம் III) ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.01.05 வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள துணை மருத்துவ சேவைப் […]

யாழ்.பொம்மைவெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 30 வயதுடைய இளைஞர் ஒருவர் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ். போதைத் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகின்ற நிலையில் ஏற்கனவே முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முத்துஐயன்கட்டு குளத்தின் ரேடியல் கதவுகள் தொடர்ச்சியாக திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக மன்னாகண்டல் – வசந்தபுரம் பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நீர்மட்டம் […]