சஜித் பிரேமதாச – இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் (Mark Andre Franche) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்நாட்களில் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச முகவராண்மைகளின் இலங்கைப் பிரதானிகள் மற்றும் ஏராளமான அரச சாரா நிறுவனங்களின் […]

பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 16ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான […]

பெண் தொழில்முனைவோர் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்!

பெண் தொழில்முனைவோர் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் ஆரம்பிப்பதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் திட்டம் வவுனியா மாவட்ட கிராமிய அபிவிருத்தி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டது. வவுனியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய நோக்கத்துடன் […]

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்!

டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. விவசாய ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் அரச வேலை நாட்களில் தமக்குரிய தபால் நிலையங்கள் அல்லது உப தபால் நிலையங்கள் ஊடாகத் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக விவசாய […]

மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து ஒருவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். 68 வயதுடைய ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியரான எல்.ரி.ஏ ரசீட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்மாந்துறைப் பகுதியில் உள்ள செந்நெல் கிராமத்தில் குறித்த நபர் பொழுது போக்கிற்காக கட்டப்பட்ட இடத்தை வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதுடன் சிலர் முன்பதிவு செய்து எடுப்பதாக […]

தங்கத்தின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று(17) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,307 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேநேரம் நேற்று (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,277 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதேவேளை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, […]

அவுஸ்திரேலியா 3ஆவது டெஸ்டில் முன்னிலையில்

இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் முதலாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், அடிலெய்ட்டில் புதன்கிழமை (17) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். கடந்த போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித், மைக்கல் நேஸர், பிரெண்டன் டொக்கெட்டை உஸ்மான் கவாஜா, கமின்ஸ், நேதன் லையன் ஆகியோர் பிரதியிட்டனர். இங்கிலாந்து சார்பாக கடந்த […]

சர்வதேச கால்பந்தாட்டம்; 2025 ஆண்டின் சிறந்த வீரராக டெம்பிலி

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரராக பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் உஸ்மான் டெம்பிலி பெயரிடப்பட்டிருந்தார். கடந்த பருவகாலத்தில் பரி ஸா ஜெர்மைன் நான்கு கிண்ணங்களை வெல்வதற்கு உதவிய நிலையிலேயே 28 வயதான டெம்பிலி செவ்வாய்க்கிழமை (16) விருதைப் பெற்றிருந்தார். கடந்த பருவகாலத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கான 53 போட்டிகளில் 51 கோல் பங்களிப்பை வழங்கியிருந்தார். ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் லமீன் யமால், […]

பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து பயணிகள் கட்டணத்தை செலுத்தக்கூடிய பேருந்து வழித்தடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வழித்தடங்களில் வங்கி அட்டை கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை அமைச்சு உறுதி செய்துள்ளது. இலங்கையின் பொது போக்குவரத்து முறையை நவீனமயமாக்கும் நோக்கில், வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் புதிய முறை 2025 நவம்பர் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாகும்புரை பல்முறை போக்குவரத்து மையத்தில், போக்குவரத்து, வீதிகள் மற்றும் […]

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுலாவுக்கு நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களை தடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விலை 1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் 87 சதத்தில் அல்லது 1.5 வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் $59.79 டொலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் 85 […]