தேசிய ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான (NOC) புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்த ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தலைமையிலான நிறைவேற்றுச் சபை குழுவினர் தவறினால் அதன் உறுப்பு சங்கங்கள்/சம்மேளனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஊடகவியலாளர்கள் மத்தியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் எச்சரித்தார். தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய நிறைவேற்றுச் சபையின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 27ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அடுத்த நான்கு ஆண்டுகள் கொண்ட […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர கால நிவாரண உதவி அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த நிதியுதவியின் கீழ், நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான போயிங் – 747 – 400 (Boeing – 747 – 400) சரக்கு விமானம் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நிவாரணப் பொருட்களின் விவரம்: இந்த விசேட விமானம் […]

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் விடுதலை!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா, இருவர் கொண்ட ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து, எதிர்வரும் 2026 ஜனவரி 20 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன […]

மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவை – பிரதமர்

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் நடைபெற்றது. முப்படைகளுக்கான உயரிய இராணுவக் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், 19ஆவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 26 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 149 பயிற்சிப் பணியாளர்களுக்கு இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன. இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் வலிமையைப் […]

மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்குப் புதிய அணியை கட்டி எழுப்புவதே நோக்கம் !

எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு புதிய இளம் வீராங்கனைகள் பலரை அணியில் இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் தீர்மானித்ததாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார். ‘எதிர்காலத்தில் அதிசிறந்த வீராங்கனைகளை உருவாக்கி தேசிய அணியைக் கட்டி எழுப்புவதே தேர்வாளர்களினதும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் குறிக்கோள் எனவும் இந்தியாவுக்கு புறுப்படுவதற்கு முன்னர் சமரி தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக ஐந்து மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை மகளிர் அணியினர் இன்று அதிகாலை […]

ஷஷினி கிம்ஹானி; இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை திறன் கொண்ட சுழல்பந்துவீச்சாளர்!

இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இரண்டு கை திறன்கொண்ட சுழல்பந்துவீச்சாளர் ஷஷினி கிம்ஹானி இடம்பெறுகிறார். 17 வயதுடைய இடதுகை சுழல்பந்துவீச்சாளரான கிம்ஹானி வலதுகையால் பந்துவீசக்கூடிய ஆற்றல் மிக்கவர். இந்த மாதம் 9ஆம் திகதி தனது 17ஆவது பிறந்தநாளை கொண்டாடிய கிம்ஹானி, ஐந்து மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அத்தடன் அண்மையில் […]

முதியோர் கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நாளை (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக அந்தந்த பயனாளிகள் இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றிருந்ததோடு, இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் (3 பில்லியனுக்கும் அதிக) அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாயம் இல்லை

மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு பாடசாலைக்கும் மண்சரிவு அபாயம் இல்லை என்பது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, ‘திட்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்ட மண்சரிவு தாக்கத்திற்கு உள்ளான மத்திய மாகாணத்தின் எந்தவொரு பாடசாலையையும் இடமாற்ற வேண்டிய அவசியமில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன சுட்டிக்காட்டினார். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 3 பிரதான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த […]

பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து: தாயும் குழந்தையும் பலி

தெஹியத்தகண்டிய பகுதியில் இன்று (17) பிற்பகல் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் முவகம்மன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தெஹியத்தகண்டியவிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் பலத்த காயமடைந்து […]

பிரதமரின் கோரிக்கை; பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இன்று (17) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான பாராளுமன்ற நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட […]