வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சாரதிகளுக்கான இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

ஜனாதிபதி செயலகம் மற்றும் கிளின் சிறிலங்கா செயலகம் என்பவற்றின் அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சினால் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பான சேவையினை வழங்குவதனை பிரதான நோக்காக கொண்டு இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தமர்வொன்றை நடத்தியது. இந்த செயலமர்வு வடக்கு மாகாண சுற்றுலாத் துறை சார் முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் என்பவற்றினை விருத்தி செய்வதற்கான சனிக்கிழமை (13) ஞாயிற்றுக்கிழமை (14) ஆகிய திகதிகளில் வலி வடக்கு பிரதேசசபையில் கொல்லங்கலட்டியில் […]

வாடகை வாகனச் சாரதி கொலை மிரட்டல்; மொன்றியலில் விசாரணை

மொன்றியலில் வாடகை வாகனச் சாரதியாகப் பணியாற்றும் முஸ்லிம் ஒருவர் கத்திமுனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வாகனச் சாரதியின் மதத்தைக் கேட்டறிந்த பயணி ஒருவர் அவரது கழுத்தை அறுப்பதாகக் கூறி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் இம்மாதம் ஆறாம் திகதியன்று இரவு 11:45 மணியளவில் வில்-மேரி (Ville-Marie) பகுதியில் உள்ள ரூ செயிண்ட்-அந்தோணி (Rue Saint-Antoine) சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தை “இஸ்லாமிய வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட தாக்குதல்” என்று கனேடிய முஸ்லிம்களின் […]

“இன்ஃப்ளூயன்சா ஏ” ஒட்டாவாவில் பரவல்

ஒட்டாவா சுகாதார அதிகாரிகள், “இன்ஃப்ளூயன்சா ஏ” பரவல் தொடர்பான கடுமையான பொதுச் சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ சுகாதாரப் பிரிவுகளில் (EOHU) இன்ஃப்ளூயன்சா ஏ (Influenza A) எனப்படும் காய்ச்சலினால் மூன்று குழந்தைகள் டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் உயிரிழந்தன. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் ஐந்து முதல் ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தே, இந்த ” பொதுச் சுகாதார எச்சரிக்கை” வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை […]

மொன்றியல் அவசரகால பாதுகாப்பு நடைமுறை நீக்கம்!

மொன்றியலின் தென்கரைப் பகுதியில் உள்ள கானா வாகே (Kahnawake) மற்றும் ஷாட்டோகுவே (Châteauguay) நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மிரட்டலைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவிய இந்த ‘துப்பாக்கிச் சூடு’ மிரட்டலால் பல பள்ளிகளில் அவசரகால பாதுகாப்பு நடைமுறை அமுல்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்போவதாக வந்த மிரட்டல் செய்தியைத் தொடர்ந்து, மொன்றியல் காவல்துறை (SPVM) மற்றும் கானா வாகே அமைதிப்படை இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தன. […]

தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க

தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சின் அறிவித்தலின் பிரகாரம், இந்திக டி சரம், தரங்க பரணவிதான, வினோதன் ஜான் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்கு நத்தார் விடுமுறை

இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் பல பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்கான நேற்று (16) திறக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கல்வி நடவடிக்கை 19 ஆம் திகதி வரையிலும் தொடரும். அத்துடன், நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படும் 2026 ஜனவரி மாதத்தில் […]

புயலால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் பற்றி தகவல் திரட்டல்!

‘டிட்வா’ புயலால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை டிசெம்பர் 25ஆம் திகதிக்குள் வழங்குமாறு தென்னை விவசாயிகளுக்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் அறிவிப்பு விடுத்துள்ளது. இந்தத் தகவலுக்கான ஏராளமான கோரிக்கைகள் உள்ளூர் கிராம அலுவலர்கள் மூலம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர் டாக்டர் சுனிமல் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்க இந்தத் தரவு பயன்படுத்தப்படும். அழிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.10,000 மானியம் வழங்குவது இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று டாக்டர் ஜெயக்கொடி […]

பாலமீன்மடு கிராமத்தில் நிவாரணம் வழங்கலில் முறைகேடு?

மட்டக்களப்பு – பாலமீன்மடு கிராமத்தில் 90 வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதும் மாநகரசபை உறுப்பினர் வழங்கிய 25 குடும்பங்களின் பெயர் பட்டியலுக்கு மாத்திரம் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் 25 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொய் கூறுமாறு பிரதேச செயலாளர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கிராம சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊடக மாநாட்டில் […]

இலங்கையில் இந்தியாவின் பாரா பீல்ட் மருத்துவமனை…

ஒபரேசன் சாகர் பந்துவின் ஒரு பகுதியாக, இந்தியாவினால் மஹியங்கனையில் அமைக்கப்பட்டுள்ள பாரா பீட்ல் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1200 நோயாளிகள் வரை சிகிச்சைப் பெறுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான அழிவு மற்றும் சேவை இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் ஒருங்கிணைந்த பணிக்குழுவின் 78 பேர் கொண்ட குழுவுடன், இந்த முழு அளவிலான பாரா ஃபீல்ட் மருத்துவமனை, 2025 டிசம்பர் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் […]

குடவத்தை மக்களுக்கு அனர்த்த நிவாரணம் கிடைக்கவில்லை!

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடவத்தை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். தாம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்று குடவத்தை கிராம மக்களை நேற்று(16.12.2025) சந்திக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனிடம் முறையிட்டுள்ளனர். அண்மைய டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் உள்ளன என்றும் ஆனால் இதுவரை எந்தவித உதவிகளும் யாரும் செய்யவில்லை என்றும் தமக்கான நிவாரணங்களை […]