புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கை தமிழகத்தை பாராட்டிய ஐ.நா
புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தை ஐ.நா.வே பாராட்டி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு; காலநிலை மாற்ற கொள்கை, நடவடிக்கை என இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு. துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தைச் சேர்த்தது தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் 500 கோடி ரூபாயை ஒதுக்கிப் பல இயக்கங்களைச் செயல்படுத்துவது வரை திராவிட மாடல் அரசின் காலநிலை மாற்ற செயல்பாடுகள் தான் இந்தியாவுக்கு ப்ளூபிரிண்ட். 2070-க்கு முன்னரே […]
ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவரே அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தோடு தொடர்புடையவர்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள போண்டை கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜித் அக்ரம் (50) என்பவர் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என அந்த மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை தெலங்கானா டிஜிபி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஜித் அக்ரம் ஹைதராபாத்தின் டோலிசவுகி பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், 1998 ஆம் […]
போதைப்பொருள் கடத்தல்; பசிபிக் கடலில் படகுகள் மீது தாக்குதல்!
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் […]
மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது
உலகத் தலைவர்களில் முதன்முறையாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் செவ்வாய்க்கிழமை (16) எத்தியோப்பியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இச்சுற்றுப்பயணத்தின் போது, எத்தியோப்பியாவில் அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். எத்தியோப்பியாவை சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், பிரதமர் அபி அகமது, பிரதமர் மோடியை […]
போராட்டத்தில் கிண்ணியா பிரதேச விவசாயிகள்
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு,மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கான அனர்த்த அழிவுகளின் போதான நடவடிக்கைகளை இதுவரைக்கும் எவரும் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவில்லை இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவே நியாயமான தீர்வை பெற்றுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் 7100 ஏக்கருக்கு ஏக்கர் வரிப்பணம் செலுத்தியுள்ளோம். இதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடுகள் கிடைத்தன தற்போது மாத்திரம் தாங்கள் புறக்கணிக்கப்படுவது […]
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை மட்டு தலைமையக பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு கைதுசெய்துள்ளனர். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 21, மற்றும் 25 வயதுடைய இரு ஆண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து குறித்த விடுதியை பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயசிங்க மற்றம் ரதன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு தங்கியிருந்து இருவரில் ஒருவரிடமிருந்து […]
காட்டு யானையை எரித்தவரைத் தேடி வலைவீச்சு!
மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் நபர் ஒருவரால் காட்டு யானை ஒன்று எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த காட்டு யானையின் மரணம் தொடர்பான தகவல்கள் இன்று (17) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யானையை எரித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரைத் கைது செய்வதற்காக, அநுராதபுர வலய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி […]
மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு!
சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் குறித்த உடல் பாகம் மீட்கப்பட்டுள்ளது. இது மேலதிக விசாரணைகளுக்காகவும் அடையாளங்காண்பதற்காகவும் […]
சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா பூரண ஒத்துழைப்பு
டித்வா புயலால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (17) காலை ஜனாதிபதி […]
டிஜிட்டல் முறையில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள செயற்பாடுகள்
அரசாங்கத்தின் “டிஜிட்டல் இலங்கை” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதரஸா கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை ஒருமித்த “டிஜிட்டல் காப்பகத்தின்” கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம், மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் […]