2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் அக்கரபத்தனையில் தோற்றது
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தோல்வி அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில், டிசம்பர் மாதத்திற்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தவிசாளர் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை சபையின் முன் சமர்ப்பித்தார். இன்றைய கூட்டத் […]
தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும்; ஸ்டொக்கம் மக்கள் ஆர்ப்பாட்டம்
நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மக்கள் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 12ம் திகதி தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஐந்து நாட்களாக முகாமில் தங்க தங்க வைக்கப்பட்ட மக்களுடைய வீடுகளை பரிசோதனை செய்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) அறிக்கை வெளியிடப்படும் என சொல்லப்பட்டதன் பின்னர் உடனடியாக அந்த […]
கொண்டையங்கேணியில் பிள்ளையானின் நெருங்கிய சகா கைது
சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று புதன்கிழமை (17) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் […]
அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன் ரூபா நட்டம்!
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அந்த […]
18 பயணிகள் பாகிஸ்தானில் கடத்தல்
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், பஸ் ஒன்றை தாக்கி, 18 ஆண் பயணியரை கொள்ளை சென்றது. பஞ்சாப் எல்லையில் உள்ள கோட்கி பகுதிக்கு அருகே, நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, முகமூடி அணிந்து, ஆயுதங்களுடன் வந்த, 20 பேர் கொண்ட கும்பல், அந்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஓட்டுநரும், சில பயணியரும் காயமடைந்தனர். பஸ்சில், 30 பயணியர் இருந்த […]
வெனிசுலா எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும்
வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதையடுத்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. […]
10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி பிபிசிக்கு எதிராக ட்ரம்ப் வழக்கு
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு முன்பாக வொஷிங்டனில் ஆதரவாளர்களிடம் ஆற்றிய உரையை தவறாகத் தொகுத்து ஒளிபரப்பியதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனிலுள்ள பிபிசி நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். பிபிசியின் பனோரமா (Panorama) நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த உரைத் தொகுப்பு, “திட்டமிட்டு, தீய நோக்குடன் மற்றும் ஏமாற்றும் வகையில்” திருத்தப்பட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த […]
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள்
2026ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; கலெக்டர்களிடம் முன்னரே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக்கூடாது. விலங்குவதை தடுப்புச்சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். காளைகளுக்கு தீங்கு எதுவும் ஏற்படக்கூடாது. விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டு உள்ளது போல காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளை […]
5000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளிகளில் மாணவர்களே இல்லை!
நாடு முழுவதிலும் 5000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களே இல்லாமல் உள்ளன. இதில் தெலுங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் 70 சதவீதம் உள்ளன என்று மத்திய அரசு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. லோக்சபாவில் இன்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம், அமரிந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோர் அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை, எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: 2025 ஆம் ஆண்டு மத்திய கல்வி […]
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது – ராகுல்
” உற்பத்தி என்பது வலுவான பொருளாதாரங்களின் முதுகெலும்பாகும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது,” என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் ஜெர்மனி சென்றுள்ளார். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவு பெறாத நிலையில் அவரது பயணம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிஎம்டபிள்யூ ஆலையை ராகுல் பார்வையிட்டார். அங்கிருந்த BMW G450GS மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தார். இந்த வாகனம் தமிழகத்தின் ஓசூரில் செயல்படும் டிவிஎஸ் நிறுவனத்துடன் BMW நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டது […]