பச்சிலைப்பள்ளி அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபர் த.ஜெபதாஸ் ? பாடசாலையில் செய்து வருகின்ற ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் புதன்கிழமை (17) அன்று காலை 7.30 மணியளவில் அமைதி வழியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் படட்டது குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் பாடசாலை சமூகத்தினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தல் மற்றும் பாடசாலை கணக்கரிக்கைகளின் முறைகேடு பாடசாலைக்கு மக்கள் செய்யும் நன்கொடைகளில் ஊழல் மற்றும் சொந்த பகமையை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை புறக்கணித்தல் […]

கடத்த முற்பட்ட கேரள கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கடத்த முற்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை (17.12.2025) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பியோடியுள்ளார். கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா தரைவழி பாதை ஊடாக கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தில் ஏற்றப்பட்ட கஞ்சாவும், வாகனமும் மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளார். சாலைப்பகுதியில் உள்ள கடற்படையினரின் தகவலுக்கு […]

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அடாவடித்தனம்: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன், பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். மண்டைதீவு பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், இளம் தாய் மற்றும் பிள்ளை இருந்த நிலையில் மோசமான செயற்பட்டுள்ளனர். இந்நிலையில் அயலிலுள்ள முதியவர்கள் இளம் பெண்ணை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கணவன் தொழிலுக்கு சென்றமை அறிந்து கொண்டு கும்பல் வீட்டுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் வீட்டுக்குள் பெரும் வன்முறை சம்பவங்களை […]

எல்லையைக் கடக்க முயன்ற 6 கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்த இஸ்ரேல்

ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கான எல்லையைக் கடக்க முயன்ற ஆறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 24 பேர் கொண்ட குழுவுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது. எனினும்TCMV பயங்கரவாதக் குழுவாக இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பான Islamic Relief Worldwide உடன் தொடர்பு கொண்டிருந்ததால், குறித்த 30 பேர் கொண்ட குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கனடாவிற்கான இஸ்ரேலிய தூதர் கூறியுள்ளார். இந்தநிலையில், இஸ்லாமிய நிவாரணத்தின் கனேடிய இணை அமைப்பு , இஸ்ரேலின், […]

நகைச்சுவையான நடிப்பினை வெளிப்படுத்தும் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான கிச்சா சுதீப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மார்க்’ எனும் திரைப்படம் – கொமர்சல் வித் கொமடி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ‘ எனும் திரைப்படத்தில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு , குரு சோமசுந்தரம், தீப்ஷிகா, ரோஷினி ஹரி பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் […]

‘சிறை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

பிரபல நடிகரான விக்ரம் பிரபு – புதுமுக நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘சிறை ‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ மின்னு வட்டம் பூச்சி’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிறை’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, எல் .கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா […]

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘

கடந்த ஆண்டில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘ஹாட் ஸ்பாட் ‘ எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் காணொலி வடிவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி […]

டொக்டர் சிவராஜ் குமாரின் ‘ 45 ‘

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான டொக்டர் சிவராஜ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ’45 ‘எனும் திரைப்படம்- ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’45 ‘ எனும் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார்- உபேந்திரா – ராஜ் பி ஷெட்டி – மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]

பொபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

சிறந்த குணச்சித்திர நடிப்பிற்காக தேசிய விருதினை வென்ற நடிகர் பொபி சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான மெஹர் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் பொபி சிம்ஹா மற்றும் நடிகை ஹிபாப் பட்டேல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ்- தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை யுவா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவ கிருஷ்ணா […]

தப்ப முயன்ற கைதிகள் சுவரில் இருந்து விழுந்ததில் காயம்!

சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிக்க முயன்றதை அடுத்து, காலி சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டால் பயந்துபோன கைதிகள் தப்பிக்கும் முயற்சியைக் கைவிட்டு சிறை வளாகத்திற்குத் திரும்பியதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். தப்பிக்க முயன்றபோது சிறைச்சாலை சுவரில் இருந்து விழுந்ததில் இரண்டு கைதிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.