நாட்டில் இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (15) மீண்டும் கூடியது. ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளைத் தொடர்ந்து, இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்துதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் குறித்த அவசியமான முடிவுகளை எடுப்பதற்காக இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி கூடிய இந்த சபை, திடீர் அனர்த்த நிலைமையுடன் கடந்த நவம்பர் 27ஆம் திகதியும், தற்போது டித்வா புயலுக்கு பிறகும் […]
மூடப்பட்ட ஸ்பிரிங்வெளி வைத்தியசாலை
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைத்தியசாலை மூடப்பட்டதன் காரணமாக ஸ்பிரிங்வெளி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்பிரிங்வெளி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த நோயாளர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தனவிடம் வினவியபோது, வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நமுனுகுல மலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் நடத்திய ஆய்வில் […]
640 பாடசாலைகள் இன்று இயங்காது
ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் இன்று (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று வழமை போல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!
மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் நேற்று (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த கோரிக்கைகள் மற்றும் பாதிப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட […]
தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை
கண்டி மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று (16) வரை நடைமுறையில் இருக்கும். அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர, தொலோஸ்பாகே, மினிபே, மெததும்பர மற்றும் கங்கை இஹல கோரலே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் […]
உலக வங்கியால் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு!
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக வங்கி, பல மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. நடைமுறை திட்டங்களிலிருந்து நிதியை மறுபயன்பாடு செய்வதன் மூலம் கஅவசரகால உதவியாக 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாக உலக வங்கி நேற்று தெரிவித்துள்ளது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு, நீர், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும், மீட்புக்கு இது உதவும் என்று உலக வங்கி அறிக்கைப் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது. அதேவேளை இலங்கையின் தென் பகுதியை […]
அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை?
சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவரமண்டிய தெனிமுல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் முன்னாள் […]
சேதமடைந்த புகையிரத வீதிகளைப் புனரமைப்பதற்கு 400 மில்லியன்
மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான 293 வீதிகள் அனர்த்தங்களால் உபயோகிக்க முடியாத வகையில் சேதமடைந்தன. எனினும் தற்போது அவற்றில் 292 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை சுமார் 40 பாலங்களும் சேதமடைந்தன. அவற்றில் 20 பாலங்கள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. […]
மணலை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் அவசியம்?
அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் விவசாய நிலங்கள் மற்றும் வயல் வெளிகளில் குவிந்துள்ள மணலை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு கட்டாயமாக அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த மணலை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைக்கு அனுமதிப்பத்திரம் பெறுவது அவசியமில்லை என்று பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார். வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரக் கட்டணம் அரசாங்கத்தால் அறவிடப்படுவதுடன், இந்த வருமானம் அரச பங்காகக் கருதப்பட்டு திறைசேரிக்கு […]