பண மோசடி தடுப்புச் சட்டம்; முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு அமைச்சு, தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், […]
நாட்டில் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை?
மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெர்வித்துள்ளார். மேலும் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மது பரிசோதனை கருவிகளும் சிறிதளவே இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் கார் விபத்து குறித்தும், அவரது பரிசோதனையில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் தென்னிலங்கையின் அச்சு ஊடகம் ஒன்று அமைச்சரிடம் வினவிய போது […]
தமிழக அரசியல் பிரமுகர்களை தமிழ் தேசியத் பேரவையினர் சந்திப்பது நல்ல விடயம் – சித்தார்த்தன்
தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை இலங்கை அரசாங்கம் திணிக்க முயற்சிக்கின்றதாக தெரிவித்து, அதனை எதிர்ப்பதற்கு தமிழக அரசியல் பிரமுகர்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில் அவர்களை சந்திக்க தமிழ் தேசிய பேரவையினர் இன்று செவ்வாய்க்கிழமை (16) சென்னைக்கு புறப்படுகின்றதாக தெரிவித்தனர். இது குறித்து கருத்து […]
சாரதி உறங்கியதால் அதிவேக வீதியில் விபத்து; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காயம்!
தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வேனின் சாரதியும் பின்னால் பயணித்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப் […]
இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை
இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. ‘திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த முயற்சிகளுக்கு உதவும் […]
மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால் “ஒப்பரேஷன் சாகர் பந்து” என பெயரிடப்பட்ட திட்டத்தின்கீழ், சௌரியா எனும் கப்பல் நேற்று திங்கட்கிழமை (15) மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1,000 தொன்களை விட அதிகமான பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் உப்பு, கோதுமை மா, மிளகாய், குடிநீர் போத்தல்கள், சீனி, சோயாமீட் உள்ளிட்ட பல பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய […]
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டு செல்வதற்கு பயணத்தடை விதித்துள்ளது. குறித்த உத்தரவானது நேற்று(15.12.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை நீதவான் வழக்கை ஒத்திவைத்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல […]
அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15) நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த அதி சொகுசு கப்பலானது நேற்றைய தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மால்டா, அரசாங்க கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 242 மீட்டர் நீளமுள்ள “லுமினாரா” என்ற அதி சொகுசு கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 375 ஊழியர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது. […]
கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி என்ற சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. விசாரணைகளின் போது,குறித்த சார்ஜன்ட் சந்தேக நபருடன் பிஸ்கட்டை இரண்டாக உடைத்து கை சைகைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், […]
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை திங்கட்கிழமை (15) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ‘டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் […]