ஊர்காவற்றுறை நீதிமன்றில் மண்டைதீவு புதைகுழி வழக்கு

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளைய தினம் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி இன்றையதினம் (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக திகதியிடப்பட்டிருந்தது. இதற்கமைய, குறித்த வழக்கு இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் […]

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

கிழக்கிலிருந்து அடித்த ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. […]

டிக்டோக் நட்பு: இளம் பெண் கூட்டு வன்முறை: திருமலையில் சம்பவம்

திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்காபட்டுன பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து வந்து குறித்த பெண்ணை தகாத நடவடிக்கை உட்படுத்திய இளைஞர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்து வாழும் குறித்த பெண் தனது தந்தை மற்றும் மகனுடனும் வசித்து வருகின்றார். இந்நிலையில் இச்சலம்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞன் டிக் டோக் மூலம் அடையாளம் […]

சூறாவளிக்குப் பிறகு குழந்தைகளை கடத்தல், சுரண்டல் அதிகரிப்பு

டித்வா சூறாவளிக்குப் பிறகு, குழந்தைகள் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கான சில கூறுகளின் முயற்சிகள் அதிகரித்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு எச்சரித்ததாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பேரழிவுகளால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்துள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான சரியான எண்ணிக்கையை ஓரிரு நாட்களில் வெளியிட அமைச்சு திட்டமிட்டுள்ளது. “குழந்தை கடத்தல் மற்றும் சுரண்டலுக்கான முயற்சிகளை நாங்கள் காண்கிறோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை […]

ஐரோப்பா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி ஆவணங்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓமான் ஊடாக ஐரோப்பா செல்ல முற்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான தமிழ் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 05.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த, குறித்த நபர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு கரும பீடத்தில் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இதன்போது குடிவரவு அதிகாரிகளுக்கு […]

சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள […]

தென் அமெரிக்க நாடான சிலியில் 35 ஆண்டுக்கு பின் மீண்டும் வலதுசாரி அரசு

சிலியின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க நாடான சிலியில், 38வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் துவங்கியது. இந்த தேர்தல் முதல் முறையாக கட்டாய ஓட்டுரிமை என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில், ஒரு கோடியே 58 லட்சம் பேர் ஓட்டளித்தனர். தீவிர வலதுசாரி ஆதரவாளரான குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் மற்றும் மத்திய- இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், […]

தேசத்துரோக வழக்கு; ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி

ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட முக்கிய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், நம் அண்டை நாடான சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்த நாடு, 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சி கேட்டு, ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஹாங்காங்கில், ‘ஆப்பிள் டெய்லி’ என்ற பிரபல நாளிதழை நடத்தி வந்தவர் […]

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ – ஆஸி பிரதமர்

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த […]

யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி சமநிலையில்

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது. யுனைட்டெட் சார்பாக அமட் டியல்லோ, கஸேமீரோ, ப்ரூனோ பெர்ணாண்டஸ், மதெயுஸ் குன்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். போர்ண்மெத் சார்பாக அன்டொய்னே செமென்யோ, இவானில்சன், மார்க்கஸ் டவேர்னியர், எலி ஜூனியர் குறோப்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.