‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் மற்றும் எதிர் காலத்தில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக ஜொலிக்க போகும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து மிரட்டி இருக்கும் ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா […]
ஐ.பி.எல் 2026 ஏலம்: 25.2 கோடிக்கு ஏலம் போன கிறீன்
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 ஏலமானது செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரரான கமரன் கிறீன் 25.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸால் ஏலமெடுக்கப்பட்டார். இதில் 18 கோடியே அவருக்கு செல்லுமென்பதுடன், மிகுதிப் பணமான வீரர்களின் நலனுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் பயன்படுத்தப்படும். இந்நிலையில் இலங்கையின் வனிது ஹசரங்கவை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு லக்னோ சுப்பர் ஜையன்ட் வாங்கியிருந்தது. இதேவேளை இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர் 7 கோடி இந்திய […]
காரைதீவு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்
காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு- செலவுத் திட்டம் (பாதீடு) செவ்வாய்க்கிழமை (16) காலை 9:30 மணியளவில் நிறைவேறியது. காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் மாதாந்த கூட்டம் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே 08 வாக்குகளால் நிதியறிக்கை வெற்றி பெற்றது. முன்னதாக அண்மைய பேரிடரில் உயிர்நீத்த உறவுகளுக்கும், அமரர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழ் தலைவர் அமரர் செல்லையா இராஜதுரை ஆகியோருக்கும் இரண்டு நிமிடம் மௌனநினைவஞ்சலி செலுத்தப்பட்டது. […]
மூன்றாம் தவணைப் பரீட்சை தொடர்பில்
2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 6 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அடுத்த […]
மொன்றியல் புறநகர்ப் பகுதியில் புதியவகை தட்டம்மை நோய் பரவல்…
மொன்றியலுக்கு வெளியே உள்ள செயிண்ட்-யுஸ்டாச் (Saint-Eustache) புறநகர்ப் பகுதியில், ஒரு புதியவகை தட்டம்மை (Measles) நோய்ப் பரவலை, கியூபெக் பொதுச் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தட்டம்மை பரவலின் முந்தைய அலை முடிவடைந்த பிறகு, கியூபெக் மாகாணத்தில் தட்டம்மைப் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மூன்று தட்டம்மை நோய்ப் பாதிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பாதிப்புகளும், குழந்தைகள் அவசர சிகிச்சை மையத்திலேயே பதிவாகியுள்ளன. இந்த குழந்தைகள் அவசர சிகிச்சை மையத்திற்குச் சென்ற […]
பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு கியூபெக்கின் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவிப்பு
கியூபெக் மாநிலப் பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு, கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (Fédération autonome de l’enseignement – FAE), மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது. தங்கள் உறுப்பினர்களில் 90 சதவீதமானோர் பணியிடங்களில் ஏதோ ஒரு வடிவத்தில் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று, ஓர் அதிர்ச்சியூட்டும் கணக்கெடுப்பு முடிவு வெளியான பின்னரே இந்த வலியுறுத்தல் வந்துள்ளது. சுமார் 65,000 ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தொழிற்சங்கமானது, ’கல்வியாளர்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்திற்கான அடிப்படை உரிமை உள்ளது’ […]
சஜித் பிரேமதாஸவின் நிவாரணப் பணிகளுக்கு அவதூறு செய்து அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை வைத்தியசாலைக்கு ரூ. 29 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, குப்பையை அகற்றாததைக் கண்டுகொள்ளவில்லை என்று சில ஊடகங்கள் அவதூறு பரப்புவதாகவும், இது அரசாங்கத்தின் அநாகரிகமான அரசியல் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) குற்றம் சாட்டியுள்ளது. எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (2025.12.16) நடந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட “ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய ஆசன அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க” முக்கியமாகத் தெரிவித்ததாவது: […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – முன்னாள் அமைச்சர் இந்திக்க அநுருத்த
வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், வெகு விரைவில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த எச்சரித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (2025.12.16) நடந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்தின் பொறுப்பின்மை: நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் பொறுப்பை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கக் குழுவினர் […]
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபாய் 5,000 போஷாக்குக் கொடுப்பனவு
சவால்களுக்கு மத்தியிலும், தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக அரசாங்கம் முதலீடு செய்யும் என்ற உறுதியுடன், டிசம்பர் மாதத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ரூபாய் 5,000/- மதிப்புள்ள போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது. தாயின் மகிழ்ச்சி குழந்தையின் வளர்ச்சிக்கு ஆதாரம் வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தாய்மார்களின் மன ஆரோக்கியம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு […]
ஆஸ்திரேலிய தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் குற்றவாளிகள்!
ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னி அருகே, சுற்றுலா தளமான பாண்டை கடற்கரை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் யூத சமூகத்தினரின் ஹனுக்கா பண்டிகையின் தொடக்க விழாவுக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், பெரிய துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சரமாரியாக […]