இழப்பீடு வழங்கும் நடவடிக்கை 50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கல்
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். ஏனைய இழப்பீடுகளை வழங்குவதற்காக அரச அதிகாரிகள் தற்போது மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களில் கம்பஹா […]
நீர்வேலியைச் சேர்ந்த குடும்பஸ்தர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த நபர் நேற்றைய தினம் (15) தாவடிப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்தபோது தவறி முதல் மாடியில் விழுந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி […]
சிவப்பு எச்சரிக்கை நீக்கம்; மஞ்சள் எச்சரிக்கை நீடிப்பு
முன்னர் வழங்கப்பட்ட நிலை 3 (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டன, அதே நேரத்தில் அதிகாரிகள் தற்போதைய நில நிலை மற்றும் சமீபத்திய மழையை மதிப்பாய்வு செய்த பின்னர் பல மாவட்டங்களில் நிலை 2 (ஆம்பர்) மற்றும் நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, பொதுமக்கள் அவதானமாகவும் அவதானமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தும் நிலை 2 (ஆம்பர்) மண்சரிவு எச்சரிக்கை மூன்று மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலக பிரிவுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி […]
பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார். தமிழகத்தில் ஜன., 15ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை, பிரதமர் மோடி தமிழகம் வந்து, பா.ஜ.,வினர் உடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். திருப்பூர், ஈரோடு என, கொங்கு மண்டலத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்டத்தில், உள்ளூர் மக்களுடன் இணைந்து, பொங்கல் கொண்டாட உள்ளார். அவருடன், ஒரே சமயத்தில், 10,000 மகளிர் பொங்கல் வைக்க, தமிழக பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக பா.ஜ., […]
தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை மீறுகின்றது!
‘2021 தேர்தல் வாக்குறுதிப்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது’ என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதுரையில் சங்க மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 2500 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் […]
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் நடந்து வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் […]
‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினியின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையில் இப்படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த அனுபவம் குறித்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் மெகா ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. புதிய படங்களுக்கு இணையாக வசூலில் வரவேற்பினை பெற்று வருவதால் தியேட்டர் உரிமையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். […]
மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா
. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த ஆடியோ லான்ச்சுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச்சுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ‘ஜனநாயகன்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் […]
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் அசோக் செல்வன் – நிமிஷ சஜயன் ஆகியோர் கதையை வழி நடத்திச் செல்லும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு […]
அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘மான் கராத்தே’, ‘கெத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் […]