200ற்கும் மேற்பட்ட ஆபத்தான கட்டிடங்கள் மகாவலி ஆற்றின் கரைகளில்?

மகாவலி ஆற்றின் இருபுறமும் (குறிப்பாக கண்டியில்) அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த பல பிரமுகர்களால் முறையான அனுமதிகள் இல்லாமல் நடத்தப்படும் இருநூறுக்கும் (200) மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா உணவகங்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் துறை விசேட கவனம் செலுத்தியுள்ளது. இந்த கட்டுமானங்களில் பெரும்பாலானவை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் எந்த ஒப்புதலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஆற்றின் இருபுறமும் கட்டப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் […]

அரசின் பாதுகாப்பில் பெற்றோரை பேரிடரில் இழந்த குழந்தைகள்…

பேரிடரில் பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் பராமரிப்பை தீர்மானிப்பதற்கான முறையான சட்ட நடைமுறைகள் முடியும் வரை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் இயக்குநர் ஷானிகா மலல்கொட, இறுதி முடிவு ஒவ்வொரு குழந்தையின் நலன்கள் மற்றும் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களிடமே உள்ளது என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் தற்போது சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் பிரதேச […]

பிரான்ஸில் விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் உயிரிழப்பு

பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார். காலை வேளையில் இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதித்தள்ளியுள்ளது. விபத்தினை ஏற்படுத்திய 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து […]

சீன அரசாங்கம் வழங்கிய 1900 கடற்றொழில் வலைகளை மன்னாரில் பயன்படுத்தக் கோரிக்கை

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி இருந்தார். வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் மிகவும் […]

AI மூலம் அனர்த்தங்களை கணிக்க புதிய திட்டம்

இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம், அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்குடன் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்,தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் […]