ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் – சிறுமிகளுக்கு அவசர உதவி

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரி சர்வதேச சமூகத்தை நாடியுள்ளது. நவம்பர் 28ஆம் திகதி அன்று சூறாவளி தாக்கியதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 520,000 வயதுவந்த பெண்கள், குறிப்பாக 22,500 கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். மருத்துவமனைகள் சேதமடைந்து வீதிகள் தடைப்பட்டுள்ளதால், அவசர மகப்பேறு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார […]

சாமரசம்பத் தசநாயக்க எம்.பிக்கு புதிய பதவி

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14.12.2025) சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் குழு கூட்டத்தில் பல முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கட்சியின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த பல நியமனங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு கட்சியில் இருந்து விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷ மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டு அவருக்கு கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக […]

இரண்டாவது முறையாக கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார். […]

படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம் – தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் பொலிஸார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் அண்மை காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், […]

இலங்கைக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும் இந்தியா

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 17 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14,200 கிலோவிற்கும் அதிகமான உலர் உணவு அடங்கிய தொகுதியே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் இந்த பொருட்களை ஒப்படைத்தார். இலங்கை சுகாதார அமைச்சரின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவம்; பெண் ஒருவர் கைது

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இடம்பெற்ற, அம்பலங்கொடை மோதர தேவாலய நிர்வாக குழுவின் தலைவர் வருசவிதான மிரந்தவின் கொலைக்கு உதவிய சந்தேகத்தில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் அனுர புஸ்பகுமார அல்லது பது மீயா என்பவரின் மனைவியே கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் மற்றும் மூன்று பேர் பொலன்னறுவையில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மூவரும் பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், […]

கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் வெடிப்பு!

கொழும்புத் துறைமுகத்தில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் எரிபொருள் பெருமளவு கடலில் கலந்துள்ளதாக இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (Marine Environment Protection Authority – MEPA) தெரிவித்துள்ளது. அதிகாலை 3.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கு பகுதியில் ஆழ் கடலில் பொற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்கு எண்ணெய்க் கப்பல்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கும் குழாயிலேயே வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையால் அதிரடியாக மூடப்பட்டு,எண்ணெய் கசிவது நிறுத்தப்பட்டுள்ளது. […]

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளோம் – நாமல் ராஜபக்ஷ

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை (14) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]

அலை வடிவ காற்றழுத்த தாக்கம்; நாளையிலிருந்து மழை அதிகரிக்கும்

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம் காரணமாக நாளை 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு […]

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை; 17 வருடங்களின் பின் தண்டனை முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று கூறப்படுபவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது ‘வசந்தன்’ தாக்கல் செய்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் […]