2025க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்
பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள, 2025க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்று உள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025க்கான பட்டியலை அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் […]
திருச்செந்தூர் கோயிலுக்கு ஆபத்து?
”தமிழக அரசின் செயல்பாடுகளாலும், அலட்சியத்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது,” என, மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க., அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் கோயில்களில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. திருச்செந்தூர் கடற்கரையை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில கி.மீ., துாரத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு காரணமாக கடல் […]
மும்பையில் அர்ஜென்டின கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி…
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்தார் மெஸ்ஸி. விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது […]
மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்
மண்சரிவு என்பது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், உலகம் முழுவதும் மழைவீழ்ச்சி, நிலநடுக்கம், பனிப்பாறைகளின் செயற்பாடுகள் காரணமாக மண்சரிவுகள் ஏற்படுவதாகவும், இலங்கையில் மழைவீழ்ச்சி காரணமாகவே மண்சரிவுகள் ஏற்படுவதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மூன்று விதமாக விடுக்கப்படுகின்றன. அவை முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுவதாக கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டார். அந்தப் பிரதேசத்தில் […]
முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கை; 981 பேர் கைது
பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான தேவையை குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை தடுத்தல் ஆகியன இதன் அடிப்படை நோக்கங்களாகும். அதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் […]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி மனுக்களை (Tenders) இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையின் கீழ் உடனடி கேள்வி மனுக்களை (Spot Tenders) செயற்படுத்தியதன் ஊடாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்
‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், இரண்டு திகதிகளின் கீழ் ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கமைய, கடுமையாக அனர்த்தத்திற்கு உள்ளான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை (16) ஆம் திகதியும், பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் […]
“என்று தணியும்” நூல் வெளியீடு; செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் நூல்
யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய “என்று தணியும்” நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பளை பிரதேச செயலாளரும் கவிஞருமான ஜெயசீலன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ம. இளம்பிறையன் கலந்து கொண்டார். தமிழ் மக்களின் வலி சுமந்த செம்மணி மனித புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் சம்பாசனையுடன் கூடிய நாவல் வடிவமாக இந்த நூல் […]
இ.போ.ச. பஸ்களில் பயணிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு …
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள், இந்தமாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நவம்பர் மாத பருவகால சீட்டை பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த மாத பருவகால சீட்டை வழங்குவதன் மூலம் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். அண்மைய அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கெப் வாகனம் விபத்து; இரு சுற்றுலாப் பயணிகள் காயம்!
யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.