காலை உணவவாக புட்டு தயாரிக்குமாமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவியை கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (15.12.2025) மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் […]

காலி மாநகர சபையில் சிவப்பு பலூன்களை வெடித்து: பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று  திங்கட்கிழமை (15) இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. காலி மாநகர சபையின் மேயர் சுனில் கமகே வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார். முதலில் பேசிய ஜிலித் நிஷாந்த (ஐ.தே.க.), இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த ஆண்டு வரவு- செலவுத் திட்டத்திலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதல்ல என்று கூறினார். இந்த வரவு- செலவுத் […]

சுனாமி அனர்த்தத்தின் போது லக்ஷ்மன் கதிர்காமர் நிதி சேகரித்தமையைப் போன்று செயற்பட தற்போதைய வெளிவிவகார அமைச்சருக்குத் திறமை இல்லை!

சுனாமி அனர்த்தத்தின் போது அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் கதைத்து இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர் நிவாரண நிதியை பெற்றுக்கொடுத்தார். இவரது வெளிவிவகார திறனை தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் கடைப்பிடிக்கவில்லை. சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கம் அநாதையாக்கப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) […]

திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City )

வியாபாரிமூலை- பருத்திதுறை , யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் இல 49, 04ம் ஒழங்கை , கண்ணகிபுரம் – உவர்மலை , திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City ) அவர்கள் இன்று 15/12/2025 திங்கள் கிழமை உவர்மலையில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும் சுவாமிநாதன் மனோன்மனி ஆகியோரின் அன்பு மருமகளும் சுவாமிநாதன் சிவபாலன் ( ஓய்வு நிலை பிரதி பிரதம செயலாளர், (நிதி) வ.கி.மா) […]

திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City )

யாழ்ப்பாணம் வியாபாரிமூலை-பருத்தித்துறையினை பிறப்பிடமாகவும் இல 49, 04ம் ஒழங்கை , கண்ணகிபுரம், உவர்மலை – திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City ) அவர்கள் இன்று 15/12/2025 திங்கள் கிழமை உவர்மலையில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும் சுவாமிநாதன் மனோன்மனி ஆகியோரின் அன்பு மருமகளும் சுவாமிநாதன் சிவபாலன் ( ஓய்வு நிலை பிரதி பிரதம செயலாளர், (நிதி) வ.கி.மா) அவர்களின் அன்பு மனைவியும் […]

இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு!

பண்டிகைக் காலம் மற்றும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் […]

பருத்தித்துறை நகர சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்

பருத்தித்துறை நகர சபையின் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளட் போலினால் இன்று திங்கட்கிழமை (15) சமர்ப்பிக்கப்பட்ட பருத்தித்துறை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் (பாதீடு) ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை அமர்வு காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சென் டீ போல் டக்ளட் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பருத்தித்துறை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நகர பிதாவினால் சமர்ப்பிக்கப்பட்டது. பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ்த் […]

கால்வாயில் கட்டி வீசிய மகள் 2 மாதத்திற்கு பிறகு உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி

தந்தையால் சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி, கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் செப்டம்பர் 29ம் திகதியன்று தள்ளி விட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. மகளின் […]

புதுடெல்லி காற்று மாசு: 100 விமானங்கள் இரத்து

புதுடெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை, மாலை என பகல் முழுவதும் பனிமூட்டம் காணப்படுகிறது. மாலைநேரத்தில் பனிமூட்டம் அதிகமாகி வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்து வருகிறது.வாகனங்களை ஓட்டுபவர்களும் பொதுமக்களும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக புதுடெல்லியில் ரயில் மற்றும் விமானப் பயணச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பனி மூட்டம், போதிய வெளிச்சமின்மையால் புதுடெல்லியில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 300 விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பல […]

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் நன்கொடை

மஸ்கெலியாவில் உள்ள 21 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட ஊதியத்திலிருந்து தலா ரூ. 1,000 வீதம் அரசாங்கத்தின் நாட்டு கட்டுமான நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர். மஸ்கெலியாவின் மவுஸ்ஸாகலை பிரிவில் உள்ள ஹபுகஸ்தென்னவின் கீழ் பகுதியைச் சேர்ந்த 21 தோட்டத் தொழிலாளர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய தோட்டத் தொழிலாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க தங்களால் இயன்ற எந்த வகையிலும் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினர்.