பொலநறுவையில் கனமழை!
நாட்டின் மலையக பகுதியை கடுமையாக பாதித்த மழை வெள்ளம் தப்போது ஏனைய பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொலன்னறுவையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சோமாவதிய – சுங்காவில பிரதான வீதியை மீண்டும் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் சுஜந்த ஏகநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வெருகலில் நிவாரணங்களை வழங்குமுhறும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் மக்கள் போராட்டம்
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்க கோரியும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரியும் மக்கள் நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரற்ற காலநிலை காரணமாகவும் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததாலும் பல சேதங்கள் ஏற்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக […]
வடக்கில் மலையக மக்களை குடியேற்ற வேண்டும், கிழக்கில் அவர்களுக்கு இடமில்லை! – ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி
மலையக மக்களை வடக்கில் குடியேற்ற வேண்டும்.கிழக்கில் அவர்களுக்கு இடமில்லை என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் இன்று(14) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். முஸ்லீம் கட்சிகள் தற்போது வாக்குகள் […]
லண்டனில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையர் கைது!
லண்டனில் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் புகலிட விடுதியில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக, இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 20 வயதான யாஷின் ஹிமாசர என்ற இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள பெல்தாமில், பகுதியில் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் சென்ற பின்னர், அவரை அடித்து […]
அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்
வடக்கு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த இந்திய இழுவைப்படகுகளின் எல்லைதாண்டிய அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம்மால் கவனஞ்செலுத்தப்படுமென ஜனாதிபதி இதன்போது பதிலளித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தப் பாதிப்புத் தொடர்பான கலந்துரையாடலின் போது இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் […]