அடகு வைத்த காணியை மீட்க வழிப்பறி?

களுத்துறை பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, முணவல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 மற்றும் 26 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை செய்வதற்காக சகோதரர்கள் இருவரதும் தாயார் வீட்டை அடகு வைத்துள்ளார். இவ்வாறு அடகு […]

வத்திராயன் பகுதியில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை-செய்தி சேகரித்த ஊடகவியலாள ருக்கும் அச்சுறுத்தல் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள், வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட போதும் எங்களுக்கு எந்த விதமான கொடுப்பனவுகளும் தரப்படவில்லை.கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு வழியின்றி ஊடகத்தை அழைத்துள்ளோம். டித்வா புயல் இலங்கையை தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமது வீடுகளும் வெள்ளத்தால் நிரம்பி […]

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று(13)விஜயம் மேற்கொண்டார். கட்டைக்காட்டிற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடைய குறைபாடுகளை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். கட்டைக்காட்டு மக்களின் அடிப்படை பிரச்சினையாக காணப்படும் கட்டைக்காடு சுண்டிக்குள வீதி புனரமைப்பு மற்றும் கட்டைக்காடு இயக்கச்சி வீதி புனரமைப்பு,வனஜீவராசிகள் திணைக்ளத்தின் ஆளுகைக்குள் இருக்கும் மக்களின் காணிகள் விடுவித்தல் போன்ற முக்கிய விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தியன் இழுவை மடி படகுகளால் கடற்றொழிலாளர்களுடைய வலைகளும் […]

செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு ரூபா 140,000 பெறுமதியான உலருணவு பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியா சென்று வழங்கி வைத்தார்.

சுமார் 13 ஆயிரம் வரையிலான வணிகங்கள் பாதிப்பு?

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட 13,698 வணிகங்கள் குறித்த தரவுகள் தொழில்துறை பேரிடர் ஆதரவு மையம் அறிவித்துள்ளது. இதன்படி நுண் அளவிலான வணிகங்கள்- 5,639, அளவிலான வணிகங்கள்-4,636, நடுத்தர அளவிலான வணிகங்கள்- 2,986 பெரிய அளவிலான வணிகங்கள் 437 என்பன பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பாதிப்படைந்த தொழில்துறைகளின் சேதங்களை முறையிட 071 266 6660 என்ற தொலைபேசி எண்ணை தொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட வணிகங்கள் தொடர்பான தகவல்களை விரைவில் வழங்குமாறு தொழிலதிபர்களை வலியுறுத்தியுள்ளது. […]

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்!

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்கள் இச்சிறுவர்களின் அடையாளம் மற்றும் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதுடன், இந்த படங்கள் மற்றும் விவரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். சிறுவர்களை சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் […]

பெண் ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக வடிவமைத்த பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை!

கொழும்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு மற்றும் 5,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த யுவதி மீது இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய, குற்றப் […]

குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும் – மத்திய சுற்றாடல் அதிகாரசபை

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். கொலன்னாவை பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், சுமார் 2 நாட்களில் அதை அகற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா போன்ற பகுதிகளில் சுமார் 10,000 முதல் 12,000 […]

பொற்பதி கொலண்ட் பழைய மாணவர்களால் 74 குடும்பங்களுக்கு நிவாரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்களால் அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த பொற்பதி கொலண்ட் பழையமாணவர்கள் அனுசரணையில் 74 குடும்பங்களுக்கு இடர்கால உதவியாக உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் சி.குகதாசன் தலைமையில் பொற்பதி கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் பொற்பதி கிராம சேவைபாளர், பொற்பதி பொருளாதார உத்தியோகத்தர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து […]

வடக்கும் கிழக்கும் மலையகத் தமிழ் உறவுகளுக்கு துணை நிற்கும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடக்கு – கிழக்கு என்றும் மலையகத் தமிழர்களுக்குத் துணை நிற்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு, அண்மையில் முழு நாட்டையும் புறட்டிப் போட்ட டித்வா சூறாவளி, மலையகத்தை வழக்கம் போலவே சூறையாடிச் சென்றுள்ளது. நாளைய விடியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கனவுகளுடனும் இருந்த ஏராளமானோரை நொடிப்பொழுதில் காவுகொண்டு மண்ணுக்கடியில் புதைத்தது. உறவுகள் இருக்கின்றார்களா? […]