உள்ளாட்சி தேர்தல்; கேரள அரசியலில் திருப்புமுனை – மோடி
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது. அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி […]
இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 2021 ஆம் ஆண்டில் இந்த […]
மெஸ்ஸியால் ரசிகர்கள் வன்முறை
ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு […]
பொதுமக்களை விட அனர்த்தத்தால் எதிர்க்கட்சியே நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் – பிமல் ரத்நாயக்க
இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி – நுவரெலியா புகையிரத பாதை புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தால் மலையக […]
கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மீட்பு !
நீர்கொழும்பு – ஏத்துகல கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் பணியில் இருந்த ஏத்துகல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளான, பொலிஸ் சார்ஜென்ட் சில்வா, பொலிஸ் கான்ஸ்டபிள்களான கோரலகே, ஹேரத் மற்றும் லக்ஷன் ஆகியோர் சிறுவனை மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர். அனர்த்தத்தில் சிக்கிய சிறுவன் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’ தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. […]
சாவகச்சேரியில் அனர்த்த நேரத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மழை அங்கிகள்
அண்மையில் இடம்பெற்ற அனர்த்த நேரத்தின் போது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஊழியர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் முகமாக மழை அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன. உபதவிசாளர் ஞா.கிஷோரின் ஒழுங்குபடுத்தலில் பிரான்ஸில் வசிக்கும் சுரேஷ் ஆனந்தின் நிதிப்பங்களிப்பில் சுமார் 25 மழை அங்கிகள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன. நகரசபைத் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உபதவிசாளர் ஞா.கிஷோர், உறுப்பினர் மு.கோகுல்றாஜ், செயலாளர் செ.நிசான், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் குணசாந்தன் உட்பட நகராட்சி மன்றின் அதிகாரிகள் […]
இன்றைய வானிலை
வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு […]
காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
புத்தளம், கொட்டுகச்சி, பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இருந்த பொதியிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிஸ்டல் ரக துப்பாக்கியும் அதற்குரிய தோட்டாக்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான வீதியில் மீண்டும் மண்சரிவு
கண்டி அலவதுகொட – அங்கும்புர பிரதான வீதியின் விலான பல்லேகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், பிரதான பாதையில ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்து மீண்டும் ஒரு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார 150 அடி உயர மண் மேடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சாலை பல நாட்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 அடி அகலமும், நிலத்தில் ஒரு பாரிய […]