கார் பந்தயம்: நடிகர் அஜித்தின் கார் திடீரென இயங்கமற்றது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் […]

நாவற்காடு கிராமத்தில் கிராம சேவையாளரால் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை?

எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள் என நாவற்காடு கிராமத்தில் கிராம சேவையாளரால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு இன்றையதினம் (14) கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் முள்ளியவளை வடக்கு நாவற்காட்டு கிராமசேவகர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் […]

டிசம்பர் 16 முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கிழக்கிலிருந்தான ஒரு அலை காற்றின் தாக்கம் காரணமாக டிசம்பர் 16ஆம் திகதியிலிருந்து நாட்டில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள காலநிலை தொடர்பான முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ […]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளரினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் தொடர் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகம் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் ஒப்புதல் இந்த வழிகாட்டுதல்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை […]

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம் அதிகாரிகள் நடத்திய ஆராச்சியில் மிகிந்தலை விகாரை மற்றும் அதை அண்டிய மலைப்பாங்கான பகுதிகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன் படி உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விகாராதிபதி தெரிவித்த கருத்து, நான் இதை கண்டு கனகாலமாகும். ஆனால் நான் சொன்னாலும் யாரும் கணக்கில் எடுக்கவில்லை என்றே […]

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெள்ளத்தினால் சேதமடைந்த கல்நேவ பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களை மீண்டும் பயிரிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் போகத்தில் பயிரிடப்படும் நாட்டு அரிசியைத் தவிர ஏனைய […]

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை மண்சரிவு மற்றும் வௌ்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 184 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த […]

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இடம்பெற்றுள்ளது. பம்பஹின்ன , வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்துள்ளதுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்தே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து சமனல வேவ பொலிஸார் மேலதிக […]

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு குறித்து முதற்கட்ட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது நடைமுறையில் உள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்ததாக புதிய டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறிப்பாக வலியுறுத்தப்பட்டது. கல்விச் சீர்திருத்தங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் பாடத்திட்ட சீர்திருத்தம், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, நிர்வாக கட்டமைப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட ஐந்து அடிப்படை […]