பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மற்றும் இந்திய விமானங்கள் நாட்டை விட்டு புறப்பட்டன!

எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மீட்பு சேவைகளுக்காக அமெரிக்காவின் C130 விமானங்கள் இரண்டும் 60 பேர் கொண்ட குழுவினரும் 2025.12.07 முதல் 2025.12.13 வரை எமது நாட்டில் பணியாற்றினர். இவர்கள் கட்டுநாயக்க மற்றும் ரத்மலான விமானப்படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மத்தள, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை […]

பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார். நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். […]

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் …

பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையில் உள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறியுள்ளார். அத்துடன் நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7000 பேர் தங்கியுள்ள நிலையில், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த […]

பாலியல் வன்கொடுமை; ஒரு பரவலான வளர்ந்து வரும் பிரச்சினை – மேன் முறையீட்டு நீதிமன்றம்

இலங்கையில் பாலியல் வன்கொடுமை ஒரு பரவலான மற்றும் வளர்ந்து வரும் பிரச்சினையாக உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன், அது நாட்டின் சமூக கட்டமைப்பில் நீண்ட நிழலை ஏற்படுத்துகிறது என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை மற்றும் சமூகத்தில் அதன் பேரழிவு […]

நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை […]

மரண அறிவித்தல்

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், இல, 77 ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரவேல் மனோன்மணி அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி பாக்கியம் (சிங்கப்பூர் பென்ஷனியர்) தம்பதிகளின் மருமகளும்,குமாரவேல்(குமரப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,யசோதரா(ஆசிரியை யா/ வேலணை மத்திய கல்லூரி, தற்காலிகமாக யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற சகீதரா மற்றும் […]

மாணவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளியுங்கள் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இந்த நேரத்தில் அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பேரிடர் காலத்தில் ஒருவர்மீது ஒருவர் கருணைமிக்க ஆரோக்கியமான பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நுவரெலியா மாவட்டக் […]

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – மன்னாரில் ஜனாதிபதி

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும், நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகங்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு […]

இங்கிலாந்து பிறீமியர் லீக்: எவெர்ற்றனை வென்ற செல்சி

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக கோல் பல்மர், மலோ குஸ்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இதேவேளை லிவர்பூல், முகாமையாளர் அர்னே ஸ்லொட்டை விமர்சித்த அக்கழகத்தின் முன்களவீரரான முன்களவீரரான மொஹமட் சாலா அவ்வணியின் மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் மாற்றுவீரராகக் களமிறங்கியிருந்தார்.

தீபக் ஹூடா சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியில்…

சந்தேகத்துகுரிய பந்துவீச்சுப்பாணியைக் கொண்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் தொடர்ந்தும் காணப்படுகின்றார். உள்ளூர்ப் போட்டியில் ராஜஸ்தானை ஹூடா பிரதிநிதித்துவத்துகின்ற நிலையில் கடந்த இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) பருவகாலத்தைப் போலவே சந்தேகத்துக்குரிய பிரிவிலேயே காணப்படுகின்றார். கடந்த பருவகாலத்தில் சென்னை சுப்பர் கிங்ஸுக்காக ஏழு போட்டிகளில் விளையாடியபோதும் பந்துவீசியிருக்கவில்லை. எவ்வாறெனினும் அதன் பின்னர் ஆறு ஓவர்களை உள்ளூர்ப் போட்டிகளில் வீசியிருந்தார். மீண்டும் சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியைக் கொண்டிருப்பதாக முறைப்பாடளிக்கப்பட்டால் ஐ.பி.எல்லில் அவர் பந்துவீச முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.