லக்சபான தேயிலை தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்தது. லக்சபான தேயிலை தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக ஜீவன் தொண்டமானுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேயிலை தொழிற்சாலையை முழுமையாக மீள்புனரமைத்து, வழமைபோல் தேயிலைத் தூள் உற்பத்தி நடவடிக்கைகளை […]
‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு
‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம் சாட்டி, ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் ‘வாழ்வுரிமையைப்’பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான வாதமாக முன்வைக்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி சுமார் 640க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் […]
ஆற்றில் கவிழ்ந்த வேன்
வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன் வேனின் சாரதி வேனில் பயணித்தவர்களை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குறித்த வேனில் பயணித்துள்ளதுடன் அதில் ஒரு பெண் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநரால் பயணிகளை காப்பாற்ற முடிந்துள்ளதுடன் அவர்கள் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அனுப்பினோம்
தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய தேரர், குறித்த நிவாரணப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு கொழும்பில் பிரபல ஊடக நிறுவனத்தின் தலைவருடன் கதைத்து உதவி செய்யுமாறு கோரினேன். அவருக்கு தமிழீழ விடுதலப் புலிகளுடன் தொடர்பு இருந்தது. அவர் எனக்கு […]
ரிட்ஸ் கார்ல்டன் அதி சொகுசு கப்பல் கொழும்பு வருகை
ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் கப்பல் தளத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை ஒருவித சவாலை எதிர்கொண்டிருந்த பின்னணியில், இவ்வாறானதொரு பாரிய பயணிகள் கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை சுற்றுலாத்துறைக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாக, இதன்போது கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க கூறினார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார […]
யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு!
சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். […]
நிவாரணம் இல்லையாயின் 1904 க்கு அழைக்கவும்
நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். பாதுகாப்பான முகாம்களில் இயங்கும் பாடசாலை மற்றும் இன்னும் ஆபத்தில் உள்ள பள்ளிகள் தவிர, அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 16 அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய (14) தினம் தேசத்தின் குரல் என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் சிறிது நேர மௌன அஞ்சலியை தொடர்ந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் நகர சபை […]
காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருவதாக உறுதி!
காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ,நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா நேற்றைய தினம் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதன் […]
நெருக்கடியில் இலங்கை மின்சார சபை!
இலங்கை மின்சாரசபை அனர்த்தநிலை காரணமாக சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பிரதி முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். அனர்த்தத்தின் விளைவாக, பல மின்சார நுகர்வோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும்,சேதமடைந்த அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் தற்போது முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் பதிவான மொத்த மின் தடைகளின் எண்ணிக்கை சுமார் 4.1 மில்லியனாக பதிவாகியுள்ளதாக […]