யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு உயிர்களை காப்பாற்றியது ஒரு இளைஞனின் மரணம்!

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்தது; மீண்டும் புயல் அபாயம்

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி செயற்பட்ட விதம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, வட […]
சேதமடைந்த வீடுகள் குறித்து வௌியான அறிவிப்பு

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், இந்த அனர்த்தத்தினால் இதுவரை கண்டி மாவட்டத்தில் 1,568 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த மாவட்டத்தில் 14,111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாகவும், மேலும் 3,742 வீடுகள் […]
ரயில் சேவையில் பெண்கள்

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.
போஷாக்குக் கொடுப்பனவு

அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முறை மட்டும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக, இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16 ஆம் திகதி […]
அனர்த்தத்தால் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்!

அனர்த்தத்தால் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க தீர்மானம் “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர அனர்த்த நிலைமை காரணமாக காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அல்லது அவளுக்கு இறப்புப் பதிவுச் […]