சிங்கப்பூர் மனிதாபிமான நிதியுதவி

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு ஆதரவாக, சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்ஆரம்ப நிதியை வழங்கியுள்ளது. இந்தத் தொகை, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சு நேற்று(12)அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சமூகங்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50,000 சிங்கப்பூர் டொலர் உறுதியளித்துள்ள நிலையில், சிங்கப்பூரின் இந்த பங்களிப்பு கூடுதல் உதவியாக அமையும். இதனிடையே […]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; முன்னாள் இராணுவ தளபதியிடம் விசாரணை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடந்த நேரத்தில் இராணுவப் புலனாய்வு பிரிவின் செயல்பாடு மற்றும் பொறுப்புகளைப் பிரிப்பது தொடர்பான பல உண்மைகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும். இந்த விசாரணைகள் தொடர்பாக கடந்த வாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடமிருந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றது. மேலதிகமாக குற்றப் […]

ஜனநாயகமற்ற முறையிலும் வெளிப்படைத்தன்மை இன்றியும் அரசாங்கம் செயற்படுகின்றது!

1978 ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டம் இற்குத் திருத்தம் கொண்டுவரும் அரசாங்கத்தின் நகர்வு, ஜனநாயகமற்ற முறையிலும் வெளிப்படைத்தன்மை இன்றியும் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். பல்கலைக்கழக கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் முறையான கட்டமைப்புசார் ஆலோசனைகளை மேற்கொள்ளாமல் இவ்வளவு முக்கியமான மாற்றங்களைச் செய்வது தவறானது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களை கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கும் தற்போதைய நடைமுறையை […]

ஊழல் குற்றச்சாட்டு; காப்புறுதி நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு பிணை

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மைலனாரச்சிலாகே டொன் வென்செஸ்லாஸ் ஜெரால்ட் லசரஸ் குணதாச (Mailanarachchilage Don Wenceslaus Gerald Lazarus Gunadasa) என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் மீது, அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிக்கு ரூ. 6,415,050 பணத்தை இலஞ்சமாக வழங்க உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இலஞ்சத்தைப் […]

யாழில் புதிய தமிழ் அரசியல் கட்சி உதயம்!

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் தலைமையகம் யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பிரபல வர்த்தகர் அருள் ஜெயந்திரனை செயலாளர் நாயகமாகக் கொண்டு, 456/1 வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்புறமாக குறித்த அலுவலகம் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் (ஆரம்பநிலை) றூபா உதயரட்ணத்தால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசியல் ரீதியில் தனது மக்கள் பணியை முன்னெடுத்துவரும் குறித்த கட்சியின் செயளாளர் நாயகமான அருள் ஜெயந்திரனை தலைமையாகக் கொண்டு, செயற்பட்டுவரும் […]

ரவி கருணாநாயக்க – அர்ஜுன் அலோசியஸ் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி 16 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை […]

பண்டிகை காலத்தில் விசேட பாதுகாப்பு

எதிர்வரும் நத்தார் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2500 மேற்பட்ட மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி எப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், டிசம்பர் மாதம் எதிர்வரும் வாரங்களில் அனைவரும் பண்டிகை காலத்தினுள் நுழைகிறோம். பண்டிகை […]

சர்வதேச அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் மாநாடு

சர்வதேச அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் மாநாடு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் களுத்துறையில் நடைபெற்றது. அவசர சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு (ResUSS 2025) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், வியாழக்கிழமை காலையில் களுத்துறை, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தில் இடம்பெற்றது. களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, இலங்கை மருத்துவ சங்கம், […]

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இருக்கவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லையெனவும், கடற்புலிகளின் தளபதி வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தாயகப்பரப்பிலிருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் தன்னிறைவு பெற்று செழித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் தாயகப்பரப்பிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய இழுவைப்படகுகளின் […]

ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக நியமனம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவராகவும் மஹரகம தொகுதி அமைப்பாளராகவும் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.