அரசாங்கத்தால் உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் திருடப்படாது என்ற நம்பிக்கை உள்ளது – ஓமல்பே சோபித தேரர்

தட்சிண லங்கையின் பிரதான சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரர், சுனாமி நிவாரண உதவிகளைத் திருடிய ஆட்சியாளர்கள் இருந்ததாகவும், கோவிட் தொற்றுநோயின் போது நண்பர்களுக்கு அண்டிஜென் பரிசோதனைகள் மூலம் திருட அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டினார். எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிடைக்கும் உதவிகள் சரியாக விநியோகிக்கப்படும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். தலப்பத்திப்பிட்டிய சமூக சேவைகள் அறக்கட்டளை ஏற்பாடு செய்த கங்கொடவில சோம தேரரின் நினைவு விழாவில் பங்கேற்று அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். * […]

இரவில் நுவரெலியாவுக்கு செல்ல வேண்டாம்?

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ‘திட்வா’ புயலினால் நுவரெலியா […]

மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வரும் இலங்கை விமானப்படை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இலங்கை விமானப்படை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றைய தினம் (2025 டிசம்பர் 12) ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தை சேர்ந்த இல 07 படைப்பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் மீமுற பிரதேசத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலதிக சிகிச்சைக்காக கர்ப்பிணித்தாய் ஒருவர் அவருடைய சிறு […]

சிலாபத்தில் கடத்தப்பட்ட 1740 kg பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்!

இலங்கை கடற்படையினர், நேற்றுமுன்தினம் சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் மாலை சிலாபம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஐம்பத்தைந்து (55) பைகள் பரிசோதிக்கப்பட்டன. […]

இயற்கைப் பேரிடரை பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளை!

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரை பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரணைமடுக் குளம் வான் பாய்ந்ததைத் தொடர்ந்து, திருவையாறு, வட்டக்கச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களின் வீதிகளிலும் வாய்க்கால்களிலும் பெருமளவில் மணல் மண் குவிந்துள்ளது. மக்கள் துயரத்தில் இருக்கும் இந்த வேளையில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக டிப்பர்களில் வரும் கும்பல்கள், இந்த மண்ணை அள்ளிச் […]

நாகர் கோவில் மக்கள் விசனம்

வடமராட்சி கிழக்கு-நாகர் கோவில் பகுதியில் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர் பக்கச்சார்பாக செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது. இந்தக் கிராமத்தில் பணி புரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக செயற்படுவதாகவும் சில பாதிக்கப்பட்ட வீடுகளை இது வரைக்கும் கிராம […]

வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிக காற்று வீசியிருந்தது. இதன் காரணமாக வெள்ள நீருடன் குப்பைகள் வீதிகள் மற்றும் குடிமனைகளுக்குள் அடித்துவரப்பட்டு குப்பைக்காடாக காணப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதியில் பயணிக்க முடியாத நிலையில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அருகில் வசிக்கும் குடும்பங்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் […]

அவசர சிகிச்சை பிரிவில் நகரபிதா சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றையதினம்(13) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் உடல் ரீதியாக மிக இயலாத நிலையிலேயே வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், […]

மகாகவி பாரதியாரின் முற்போக்குச் சிந்தனைகள் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை – ஆளுநர்

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது. இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர் […]

காலநிலை அபாயம் தொடர்கிறது: 19ஆம் திகதி வரை எச்சரிக்கை

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கனமழை தணிந்திருந்தாலும், 4 மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 இடங்களை ஆய்வு செய்துள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. […]