18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பேரிடரால் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் ஏற்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அன்றைய தினம் துணை மதிப்பீடு அங்கீகரிக்கப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 365 கிராம் ஹெரோயின், 375 கிராம் ஐஸ், 07 கிலோகிராம் 487 கிராம் கஞ்சா, 12,122 கஞ்சா செடிகள், 07 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், […]
பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கு பிணை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியிலுள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று (12) வெள்ளிக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 19 […]
பல பிரதேசங்களுக்கு அரசாங்கத்தால் எந்தவித நிவாரணங்களும் கிடைக்கவில்லை?
அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். எனினும், பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவித நிவாரணங்களை கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், தனிநபர்களால், குழுக்களால் அல்லது அமைப்புக்களால் வழங்கப்படும் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட தூர பிரதேச மக்களை இதுவரை சென்றடையவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கத்தால் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கிராம சேவகர்களை […]
மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிப்பு
அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் நேற்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வருடாந்த மதுவரி கட்டணம், தொழில் கட்டணத்திற்காக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் […]
கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி “Colours Night 2025”
கொழும்பு 04, புனித பேதுருவானவர் கல்லூரியின் (St. Peters college) விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘Colours Night 2025’ விழா 12 ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இளம் விளையாட்டு வீரர்களின் அபாரமான சாதனைகளை கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, பெருமை, ஊக்கம் மற்றும் பாராட்டுகளால் நிரம்பியதாக அமைந்தது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக TDM International Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று […]
அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது
2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நர்கெஸ் முகமதி, ஈரான் நாட்டில் […]
கல்முனை விபத்தில் 650 கோழிகள் உயிரிழப்பு
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டாக்கில் மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கோழிகளை ஏற்றிக்கொண்டு மட்டு கல்முனை சாலை வழியே கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் […]
ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் வீதியில் புதிய இரும்புப் பாலம்

ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசில்ரீ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தமையால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பாலத்தின் இணைப்புகள் ஏற்கனவே பழுதாகியிருந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாலம் கடுமையாகச் சேதமடைந்து கடந்த மாதம் (29) இடிந்து விழுந்தது. அன்று முதல் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. இதனையடுத்து, பல்லேகல இலங்கை இராணுவத்தின் […]
நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட உதவிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒருகொடவத்தையில் அமைந்துள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழு உறுப்பினர்கள் நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஒருகொடவத்தையில் உள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக விநியோகிக்கும் பணிகள் இந்நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் […]