சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சாரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் மகாபாரதம் தொடர் சொற் பொழிவினை செஞ்சொற் செல்வர் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் சநசநிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை

நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி அங்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். நிலவும் மண்சரிவு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலத்தை உறுதிப்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான அவசியமான அறிவுறுத்தல்களையும் திட்டங்களையும் இதன்போது அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார். அதற்கமைய, ஹக்கல தாவரவியல் […]

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ […]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி ?

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் எனக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார். இதன்போது அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானித்தால், அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி […]

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு: அநுராதபுரம்: அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. அம்பாறை: 9 இல் 3 நீர்த்தேக்கங்கள். பதுளை: 7 இல் 3 நீர்த்தேக்கங்கள். மட்டக்களப்பு: 4 இல் 3 நீர்த்தேக்கங்கள். ஹம்பாந்தோட்டை: 10 இல் 4 […]

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (12) சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஐயம் மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வெளிநோயாளர் பிரிவு, மருத்துவமனை வளாகம், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ஹீமோடையாலிசிஸ் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி, எக்ஸ்ரே சிகிச்சை பிரிவு, சி.டி ஸ்கான் சிகிச்சை பிரிவு, மருத்துவ குடியிருப்புகள், மற்றும் சுகாதார ஊழியர் […]

யாழ் சிறையின் நிவாரண உதவி

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் […]

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை […]

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 […]

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட இருபத்தி ஆறு சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். தெல்தெனிய காவல் எல்லைக்குள், விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இன்று (13) அதிகாலை இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​பொலிஸார் 4,134 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத் (ஐஸ்), 1,875 மில்லிகிராம் ஹாஷிஷ், 2,769 மில்லிகிராம் குஷ், […]