யாழ் சாரதி அதிவேக வீதியில் குப்பை வீசியமைக்காகக் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் நேற்று (10) பிற்பகல் கைது செய்துள்ளனர். குறித்த அதிவேக வீதியின் 19வது கிலோமீட்டர் மைல்கல் அருகே, கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றின் சாரதி, குப்பை அடங்கிய ஒரு பையை அதிவேக வீதியில் எறிவதை அங்கு நடமாடும் சோதனையில் ஈடுபட்டிருந்த இருந்த அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

இன்றும் பலத்த மழை

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். சப்ரகமுவ, மத்திய மற்றும் […]

யுனஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகையும்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாசார பாரம்பரிய பட்டியலில் நேற்று (10) இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. அருவமான கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ICH) 20 மாநாடு தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். டிசம்பர் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் […]

விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு கடற்கரை போல் மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளது. வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் மூடியிருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,மணலை […]