பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் கைது

பண்டாரவளையில் வணிக வளாகத்திற்கு அருகில் பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் நேற்று முன்தினம் மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவர் பண்டாரவளை, அத்தலப்பிட்டியவை சேர்ந்த 15 வயதானவர் என தெரியவந்துள்ளது. அவர் பண்டாரவளையில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் பாடசாலையில் நாடகம் மற்றும் நடிப்பு பயிலும் மாணவன் எனவும் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பரதநாட்டியத்திலும் ஆடியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பல […]

யாழ் ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியை தீ விபத்தினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தமிழ் ஆசிரியை உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக […]

உயர்தரப் பரீட்சை; நேர அட்டவணை

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதங்கேணி-பருத்தித்துறை வீதி கைவிடப்பட்டுள்ளதா?

வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் கனமழையால் மருதங்கேணி பருத்தித்துறை வீதி முற்றாக பாதிப்படைந்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருமளவு நிதியில் போடப்பட்ட குறித்த வீதி இன்றுவரை தரமற்ற வீதியாகவே காணப்படுகின்றது. இந்த வீதி புனரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை. மருத்துவ நோயாளிகள்,அரச ஊழியர்கள்,பாடசாலை மாணவர்கள்,வர்த்தகர்கள் என பலரும் பயணம் செய்யும் குறித்த வீதி பாழடைந்ததாகவே காணப்படுகின்றது. […]

வெள்ளத்தால் பெருமளவான உணவுப் பொருட்கள் நாசம்

கம்பளையில் வெள்ளத்தால் பெருமளவான உணவுப் பொருட்கள் நாசம் திட்வா புயலுடன் கம்பளை நகரை பாதித்த வெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு மேலதிகமாக, கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளுக்குள் இருந்த பெருமளவான உணவுப் பொருட்களும் அழிவடைந்துள்ளன. இதற்கமைய, கம்பளை நகரில் உள்ள 2 சிறப்பங்காடி வளாகங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இவ்வாறு அழிவடைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்கு மேலதிகமாக பருப்பு, சீனி, மா முதலானவையும் அவற்றில் அடங்குகின்றன. கம்பளை – நாவலப்பிட்டி வீதியில், கஹட்டபிட்டிய மற்றும் […]

எதிரணிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கோரிக்கை

“இயற்கைப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான நடவடிக்கையைக் கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இலங்கை முழுவதிலும் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரனர்த்தம் வரலாற்றில் பெரும் அழிவாகப் பதியப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான […]

தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த கனடா அரசு நடவடிக்கை

இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கனடா அரசு தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் கனேடியர்களையும் சமூகங்களையும் மிரட்டல், வெறுப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கீழ்க்கண்ட அமைப்புகளை பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளார். 764, Maniac […]

வழமைக்குத் திரும்பியது கண்டி – நுவரெலிய வீதி

கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் மேற்குறிப்பிட்ட வீதிகள் கனரக வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாகக் கூறினார். மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த […]

100 மில்லியன் ரூபா வழங்கிய திரிபோஷ நிறுவனம்

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி நேற்று (10) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலையை கையளித்தனர். இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.

‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’

‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’  எதிர்வரும் 13.12.2025 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 1120 Tapscott Road, Unit 3 தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள  விழா கலை, இலக்கியம், இசை, நடனம் என எம் தமிழர் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த கலைகளின் சங்கமமாக அமையவுள்ளது. அத்துடன் ‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’ தனது 29 ஆவது ஆண்டாக இந்த நிகழ்வைக் கொண்டாடவுள்ளமை சிறப்பம்சமாகும். இசையின் இனிமை… நடனத்தின் நயமை… தமிழிசைப் பாடல்கள்… […]