தேசிய பூங்காக்கள் திறப்பு
‘டித்வா’ சூறாவளியால் மூடப்பட்டிருந்த பல தேசிய பூங்காக்கள் மற்றும் தங்குமிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. யால (பிரிவு 6 தவிர), வில்பத்து, குமண, வஸ்கமுவ, ஹோட்டன் சமவெளி, கவுடுல்ல மற்றும் மின்னேரியா தேசிய பூங்காக்கள் நவம்பர் 28 முதல் மூடப்பட்டன.மேலும் சுற்றுலா பங்களாக்கள் மற்றும் முகாம் தளங்கள் பகல்நேரம் திறந்து இரவு மூடப்பட்டன. ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா, குமண தேசிய பூங்கா மற்றும் யால தேசிய பூங்கா (தொகுதிகள் 1–4) டிசம்பர் […]
வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித்
முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்பப்பட்டமை மற்றும் மாசுபாடு ஏற்பட்டமை போன்ற காரணங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், கிராண்ட்பாஸ் புனித ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனையின் போது அவர் இதனை குறிப்பிட்;டுள்ளார். இந்தநிலையில், முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்புவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலத்தில் கம்பஹா நகரம் நீரில் மூழ்கியதை தாம் பார்த்ததில்லை. மாறாக,முத்துராஜவெலவை அங்கீகரிக்கப்படாத […]
முள்ளிக்குளம் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்திற்கு அங்கீகாரம்
மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனையை வலுசக்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
மக்களின் கண்ணீரிலும் மரணங்களிலும் அரசாங்கம் அரசியல் செய்ய முயற்சிக்கின்றது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
தமது இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பிழையை மூடிமறைக்க அரசாங்கம் அரச அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் தெரிவித்தார். இன்று (2025.12.11) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் மேலும் கூறியதாவது: > “இந்த நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான […]
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 868 பேர் கைது!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 868 பேர் கடந்த திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 869 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 01 கிலோ 229 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 433 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 642 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 275705 கஞ்சா […]
சூறாவளி, டிட்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பின் மாரடைப்பு நோயாளிகள் அதிகரிப்பு
சூறாவளி, டிட்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க கூறினார். உலகளாவிய ஆராய்ச்சியில், இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். திடீர் இழப்பு, அதிர்ச்சி மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை கடுமையான உளவியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன, இது மாரடைப்பைத் தூண்டும். பேரிடரால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு […]
திருமண நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்த பெண் செய்த உதவிகள்…
பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்த பிரித்தானிய வாழ் 61 வயதான ஐரி பெரேரா என்ற பெண் மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளையில் தனக்கு சொந்தமான வீட்டில், வெள்ளத்தினால் வீடிழந்த 25 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பொருட்களை […]
நான்கு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன – நுவரெலியா மாவட்ட செயலாளர்
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் , மண்சரிவு உட்பட ஏனைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நுவரெலியாவிற்கு உள் நுளையும் நான்கு பிரதான வீதிகள் தடைபட்டிருந்தன. நுவரெலியா-கண்டி வீதி உட்பட நுவரெலியாவுக்குச் உள் நுளையும் நான்கு வீதிகளில் தடைகள் நீக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை (10) பிற்பகல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்டச் செயலாளர் மேலும் கூறுகையில் பிரதான வீதிகளை […]
பூச்சிக்கொல்லி, பீடி இலைகளுடன் ஒருவர் கைது
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைத் தொகையுடன் வென்னப்புவ பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வென்னப்புவ மா ஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 626 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 17 பொதிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என சந்தேகிக்கப்படும் 60,000 பக்கற்றுகள் அடங்கிய 20 பொதிகளுடன் […]
தொழுவ பிரதேச மக்கள் உணவும் உதவியும் இன்றி தவிப்பு!
தொழுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடபலாத மற்றும் பல பகுதிகளில் அனர்த்தத்தினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டு எந்தவொரு உதவியும் கிடைக்காமல் தவிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த பகுதிக்கு எந்தவொரு அரசியல்வாதிகளோ, கிராமசேவகர்களோ வருகைதரவில்லை எனவும் அதற்குரிய பாதைகள் சரியாக இல்லை எனவும் கூறியுள்ளனர். மேலும், அரசாங்காத்தால் கிடைக்கு எந்தவொரு நிவாரணமும் குறித்த பகுதிமக்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகி்றது. 25ஆம் திகதி முதல் இதுவரை மின்சார வசதி கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளவேண்டும் […]