இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் இலஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கமைய, அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் ஒருவருக்கு நேற்றுக் காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018க்கு இடையில் பல திட்டங்களை செயற்படுத்தவும் அதற்கு நிதி அளிப்பதற்கும் அவர் பெருமளவில் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் 156 மில்லியன் டொலர்களுக்கு […]

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது!

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்தம் அதிகரித்துள்ளமையை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. “வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இது மிகப்பெரிய எரிபொருள் தாங்கி கப்பல் , உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவைகளில் மிகப்பெரியது” என ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். எரிபொருள் தாங்கி கப்பல் கைப்பற்றப்பட்ட […]

இந்திய மாணவியை வேலைக்கமர்த்திய பிரித்தானிய அரசியல்வாதிக்கு அபராதம்

பிரித்தானியாவில் இந்திய மாணவி ஒருவரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்திய லேபர் கட்சி அரசியல்வாதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் மேற்கு வண்டனில் உள்ள லேபர் கட்சி கவுன்சிலர் ஹினா மீர் (Hina Mir), இந்திய மாணவி ஒருவரை குழந்தை பாதுகாவலராக (Nanny) வேலைக்கு அமர்த்தியதற்காக 40,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹினா மீர், 22 வயதான ஹிமான்ஷி காங்க்லேயை (Himanshi Gongley) மாதம் 1,200 பவுண்டு பணமாக வழங்கி, தன் இரு குழந்தைகளை கவனிக்க பணிக்கு அமர்த்தியுள்ளார். […]

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு; 6 வீரர்கள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச்சாவடியில் இராணுவ வீரர்களின் முகாமுக்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இலங்கை கிரிக்கெட் அணி பயணம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று புதன்கிழமை (10) அதிகாலை ஐக்கிய அரபு இராச்சியத்துக்குப் புறப்பட்டது. இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் இருந்த குகதாஸ் மாதுலன் (Kugathas Mathulan), தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியுடன் இணையவில்லை. அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்படத்தக்கது. இந்நிலையில், குகதாஸ் மாதுலனுக்கு பதிலாக வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த […]

துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய கோலி

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு, றோஹித் ஷர்மா, 2. விராட் கோலி, 3. டரைல் மிற்செல், 4. இப்ராஹிம் ஸட்ரான், 5. ஷுப்மன் கில், 6. பாபர் அஸாம், 7. ஹரி டெக்டர், 8. ஷாய் ஹோப், 9. சரித் அசலங்க, 10. ஷ்ரேயாஸ் […]

வடமராட்சி கிழக்கு லீக் தலைவர் பதவி நீக்கம்

வடமராட்சி கிழக்கு கால்பந்தாட்ட லீக் தலைவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது உறுப்புரிமையில் இருந்து கட்டைக்காடு சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் நீக்கியுள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு லீக் தலைவராக இருப்பவர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழக உறுப்பினர் ஆவார் இவர் அண்மைக்காலமாக தமது கழக சட்ட திட்டங்களை மீறி முரணாக செயற்பட்டு வருவதால் தமது கழக உறுப்பினர் உரிமையில் இருந்து உடன் நீக்குவதாகவும் லீக் […]

நிர்மலா சீதாரமனுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. OCI அட்டையை […]

சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை திரட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையம் உதயம்!

டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று அனர்த்த தகவல் மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்த மட்டத்தில் ஏதேனும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையம் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, பொறுப்போடும் வகைகூறலோடும் வெளிப்படையாகவும் நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் முகமாக உரிய தரப்போடும், நிவாரண குழுக்களோடும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். […]

தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் – பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான உபாயங்களை வகுத்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயல்திட்டத்திற்கு இணங்க தொழில்சார் கல்வியைப் பலப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாராஹேன்பிட்டிய தொழில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, தொழில்சார் கல்வித் துறையின் எதிர்கால மேம்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட மூலோபாயத் திட்டம் குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் தொழில்சார் […]