ஓட்டாவா நகர சபை வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது!
ஓட்டாவா நகர சபையானது (City Council) 7.12 பில்லியன் டொலர் மதிப்பிலான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 21க்கு 4 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரித்துள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகே, இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஓட்டாவா குடியிருப்பாளர்களுக்கு, சொத்து வரியில் ஒட்டுமொத்தமாக 3.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து இந்த சொத்து வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது. இந்த வரவு செலவுத் திட்டமானது, பொதுப் […]
உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடிய ஆயுதப் படைகள் அணிதிரட்டல்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் கனடிய ஆயுதப் படைகள், ஒரு விரிவான மற்றும் பிரம்மாண்டமான அணிதிரட்டல் திட்டத்தை (Mobilization Plan) வகுத்துள்ளன. போட்டி நாடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உள்நாட்டுப் பேரழிவுகள் ஆகிய இரண்டையும் எதிர்கொள்ளும் வகையில், தேசத்தின் பாதுகாப்புக்கு "சமூகத்தின் முழுமையான அணுகுமுறை தேவை என்று இத்திட்டம் வலியுறுத்துகிறது. “பாதுகாப்பு அணிதிரட்டல் திட்டம் (Defence Mobilization Plan -DMP)”என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டமானது, ஆயுதப் படைகளுக்குத்துணையாக, 300,000 […]
நூற்றாண்டு பழமையான இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கனடாவுக்கு…
நூற்றாண்டு பழமையான (Inuit) கயாக் (Kayak) எனப்படும் படகு உட்பட 62 விலைமதிப்பற்ற ‘இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் வத்திக்கானில் இருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளன. கத்தோலிக்க திருச்சபைக்கும் கனடாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில் இந்த பொருட்கள் மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கியூபெக் மாநிலத்தின் கத்தீனோவில் உள்ள கனடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் (Canadian Museum of History) பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 1925 ஆம் […]
சம்பியன்ஸ் லீக்: மட்ரிட்டை வென்ற சிற்றி
சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. சிற்றி சார்பாக நிக்கோ ஓ ரெய்லி, எர்லிங் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றிருந்தார். இதேவேளை லா லிகா கழகமான அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் நடப்புச் […]
இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு
தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் 2018 – 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இவர், பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியை இழந்தார். புதிதாக பதவியேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, […]
இஸ்ரேல் பிரதமரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பிற்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோடி இடையே முக்கிய சந்திப்பு நடைபெற இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வரி விதிப்பால் உலக நாடுகளிடையே அமெரிக்கா கடும் எதிர்ப்பினை சம்பாரித்து வருகிறது. இதன் விளைவாக, அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகள் கைகோர்க்கும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்திருந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த […]
தந்தைக்கு கருணாநிதிக்கு சிலை முக்கியமா? அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா?
ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? என முதல்வர் ஸ்டாலின் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர். பெற்றோர்களின் […]
கோவா தீ விபத்தில் 25 பேர் பலியான வழக்கு: தப்பியோடிய விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது
கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகிய இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ இரவு விடுதியில் கடந்த டிசம்பர் 6ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உடனடியாக […]
டிச.17 வரை தமிழகத்தில் மழை
தமிழகத்தில் டிச.17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிசம்பர் 17ம் தேதி வரை தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான […]
மொரோக்கோவில் இரு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி
மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்களுக்கு அடங்குவதாகவும், இடிந்து விழுந்த இந்த இரண்டு கட்டிடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் […]