பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்ய அரசு நிதி உதவி
இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இந்த நடவடிக்கைக்கு உதவி வழங்குதல் பொருத்தமானது என அரசு தீர்மானித்துள்ளது. […]
வடக்கு கடற்றொழிலாளர்கள் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளும் கடற்றொழில் மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளையும் தடுத்து நிறுத்த நீரியல்வளத் திணைக்களம், ஜனாதிபதி ஆகியோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தருமாறும், கடற்றொழிலாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வலியுறுத்தியுள்ளது. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் இன்று(11) நண்பகல் யாழ். […]
வவுனியா – யாழ்ப்பாணம் தொடருந்து பாதை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
புயல் மற்றும் மழையின் காரணமாக பாதிப்படைந்த தொடருந்து பாதைகளை சீரமைக்கும் நடவடிக்கைகளை வவுனியா தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்களும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர். வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடருந்து பாதைகள் பல இடங்களில் வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்திருந்தது. இந்த பாதிப்படைந்த தொடருந்து பாதைகளை சீரமைத்து தொடருந்து சேவையை வழமைக்கு கொண்டு வரும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக தொடருந்து தண்டவாளங்களை பழுது பார்த்தல் மற்றும் தண்டவாளங்களில் நீர் பாய்ந்த அரிக்கப்பட்ட இடங்களை சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இராணுவத்தினரும் […]
நடிகை மதுபாலா – இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’
‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை மதுபாலா- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘சின்ன சின்ன ஆசை ‘எனும் திரைப்படத்தின் புதிய தகவல்களை பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா- மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் […]
ரஜினிகாந்தின் ‘படையப்பா’ ரிட்டர்ன்ஸ்
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆவது ஆண்டு பொன் விழா நிறைவு செய்வதால் அதனை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான நாளை டிசம்பர் 12 ஆம் திகதியன்று அவரது நடிப்பில் வெளியான ‘படையப்பா’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பட மாளிகையில் வெளியிடப்படுகிறது. இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற ‘படையப்பா’ எனும் […]
வில்லனாக விஜய் சேதுபதி
ரவிகிரண் கோலா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ‘ரவுடி ஜனார்த்தனன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தினை ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கிரிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இதன் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் […]
யாழில் பாரிய நிதி மோசடி அம்பலம்
பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடம் 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் தாளையடியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 30,691,444 ரூபாய் கையொப்பமிட்டு வங்கிக் கணக்கில் வைப்பு செய்து மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக […]
2,284 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்காக 2,284 பேரை புதிதாக ஆட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே தெரிவித்துள்ளார். இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ‘டித்வா’ புயலால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா. பேரிடர் முகாமைத்துவ […]
‘ஹெல்த் கேர் கனெக்ட்’ மீது ஒன்டாரியோ மாகாணத்தில் குற்றச்சாட்டு!
ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்ப மருத்துவர்கள் அல்லது தாதிகளைத் நாடும் நோயாளிகள், மாகாணத்தின் காத்திருப்புப் பட்டியலான ‘ஹெல்த் கேர் கனெக்ட்’ (Health Care Connect – HCC) மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களைத் தேடும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை, சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன் இந்த அமைப்பு இணைக்கத் தவறியுள்ளது. இதனாலேயே, ‘ஹெல்த் கேர் கனெக்ட்’ அமைப்பு குறித்த பெரும் ஏமாற்றம் நோயாளிகள் மத்தியில் நிலவுகிறது. ‘ஹெல்த் கேர் கனெக்ட்’ அமைப்பு ஒன்டாரியோ மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி […]