நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அரச ஆவணங்களும் சேதம்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் (Department of National Archives) பணிப்பாளர் நாயகம் நதீரா ரூபசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நதீரா ரூபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவற்றில் சுமார் 100 வருடங்கள் பழமையான அரச ஆவணங்களும் அடங்குகின்றன. பதுளை, கண்டி, நுவரெலியா உள்ள மாவட்டங்களில் உள்ள 40 அரச அலுவலகங்களில் […]
இலங்கை மோட்டார்ஸ் போர்ட்டில் விரைவான மாற்றம்
இலங்கையின் முன்னணி கார்ட்டிங் குழுவான மோரா ரேசிங், நுழைவு நிலை கார்ட்டிங் முதல் சர்வதேச ஃபார்முலா பந்தயம் வரை மோட்டார் விளையாட்டு திறமைகளை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. 2023 இல் நிறுவப்பட்ட அணியின் பெயர், “மோரா” (சிங்கள மொழியில் சுறா), உலகளாவிய போட்டிக்கு ஒரு தனித்துவமான உள்ளூர் அடையாளத்தை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. கோவிட் தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இலங்கையில் கார்ட்டிங் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு தொழில்முறை பந்தய அணியாக விரைவாக வளர இரண்டு […]
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – கனேடிய நாடாளுமன்றில் லோகன் கணபதி
கனேடிய நாடாளுமன்றில் Progressive Conservative Party இன் உறுப்பினர் லோகன் கணபதி டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தனது பதிவினை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது உரையில் நவம்பர் 28ஆம் திகதி இலங்கைத் தீவை அழித்து நினைத்துப் பார்க்க முடியா இழப்பை ஏற்படுத்திய மிகவும் கொடிய சூறாவளியான டிட்வாவைப் பற்றிப் பேச இன்று நான் கனத்த இதயத்துடன் எழுந்திருக்கின்றேன். இது 2004 சுனாமியை விட மோசமானது. 600இற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றார்கள். 190 பேர் காணாமற்போயுள்ளனர். 500,000 இற்கும் […]
முல்லைத்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய மழை நிலையை கருத்திற் கொண்டு வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் வயல்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது மிக அவசரமான அறிவிப்பு எனவும் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, முல்லைத்தீவு – கோடாலிக்கல்லு குளத்தின் அணைபகுதி ஏற்கனவே […]
வவுனியாவில் 3 இடைத்தங்கல் முகாம்களில் பல குடும்பங்கள்
வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தொடர்ச்சியாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று (09) தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்ப்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 58 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்த நிலையில முகாம்களில் இருந்த மக்கள் மீண்டும் […]
எதிர்வரும் 3 தினங்களுக்கு தொடரவுள்ள மழை..
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாகவும், […]
கனடாவில் அதிகரிக்கும் ஆட்கடத்தல்கள் – கனேடிய புள்ளியியல் அலுவலகம்
கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்து வருவதாக கனேடிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2014 முதல் 2024 வரை, கனடாவில் 5,000க்கும் மேற்பட்ட மனித கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் தப்புவது கடினமாகிவிடுகிறது. இந்நிலையில், கனடாவில் ஆட்கடத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒன்ராறியோவிலுள்ள Guelph மற்றும் Thunder Bay ஆகிய நகரங்களில் தான் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெறுகிறது […]
அண்மையில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி; வெளியாகியுள்ள காரணம்!
வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, லெப்டினன்ட் எரங்க சாமர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாரவில நீதிவான் தினிந்து சமரசிங்க முன்னிலையில் நடைபெற்றது. இதன் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வென்னப்புவவுக்கு மேலே உலங்கு வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது, கிங் ஓயா பாலம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள், […]
ஜப்பானுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை குறைக்கபட்ட நிலையில், தற்போது மெகா நிலநடுக்க எச்சரிக்கை, விடுக்கப்பட்டு இதன் காரணமாக 300,000 பேர் சரி இறக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திங்கட்கிழமை […]