இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9) இடம்பெற்றுள்ளது. கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் வயது (33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று இளைஞர்கள் நேற்று(8) மாலை குறித்த குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்றனர். இதன்போது குறித்த இளைஞன் தூண்டிலை குளத்தில் வீசியவேளை தூண்டில் முழுவதுமாக குளத்தில் […]
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாம் […]
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை
தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நேற்று (09) பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிதித் திரட்டல் முயற்சியைத் தென் கொரியாவின் ஜியோன்ஜு நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இலங்கையர் ஒருவரே வழிநடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் தென் கொரியாவில் உள்ள இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், தான் தனிப்பட்ட முறையில் விடுத்த உதவிக்கான கோரிக்கையை […]
71 குடும்பங்கள் வெளியேற்றம்
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08) வெளியேற்றப்பட்டதாக நல்லத்தண்ணி கிராம அலுவலர் திருமதி டபிள்யூ.எம். சசிகுமாரி தெரிவித்தார். நிலச்சரிவு சுமார் 25 அடி நீளம் கொண்டது, நில வெடிப்பு தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கிராம அலுவலர் சசிகுமாரி தெரிவித்தார். வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது தற்காலிகமாக நல்லத்தண்ணி, தமிழ் வித்தியாலயம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையத்தில் தங்கியுள்ளனர், மேலும் 129 […]
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார். பத்தரமுல்ல சுஹுருபாய காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2,427 சாலை விபத்துகளில் 2,570 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை
இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே சசித் தமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேக நபர், பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பாணந்துறை பகுதியில் உள்ள தனியார் கணினி பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி […]
ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆதரவளிக்கும் என்றும் இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளரிடம் பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்தார்.
பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்
பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின் ஆதரவுடன், அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பொறிமுறையின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. அதனை பொதுமக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறியப்படுத்த விரும்புகிறது. அண்மையில் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பல குறுஞ்செய்திகள் WhatsApp, Facebook […]
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் நேற்று 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து […]
27 வயது இளைஞர் விபத்தில் பலி
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ லோரி ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியான இளைஞன், திருமணமாகி […]