இலங்கையை மீள கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி

பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீள கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் இந்த நிதி கிடைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார். காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சரின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தித்வா புயலினால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான […]

வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்

நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது, பயணங்களை சிறப்பாக […]

ஆரம்பமான புதிய திட்டம்

டிட்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன அமைப்புகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்குடன், பதுளை மாவட்டத்தில் நேற்று இரு வார கால சீரமைப்புத் திட்டம் ஆரம்பமானது. எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கை காலத்திற்கு முன்னர் நீர்வழங்கல் கட்டமைப்புகள் முழுமையாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் அளித்த தகவலின்படி, சூறாவளியின்போது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால், குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள் மற்றும் அணைகட்டுகள் உள்ளிட்ட 1,020 நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் […]

அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கை விஜயம்!

அவுஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி, குடியுரிமை, சுங்கம் மற்றும் பல்வகை கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தக் கடினமான காலகட்டத்தில் ஜூலியன் ஹில்லின் இலங்கை விஜயம், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் ஆதரவளிப்பையும் வலியுறுத்துகிறது. ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜூலியன் ஹில், நிவாரண பங்காளர்களை இன்று சந்தித்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜூலியன் ஹில், பெண்கள் […]

தொலைத்தொடர்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள் திருட்டு – ஒருவர் கைது!

ரம்புக்கனை, யடகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் 13 கிலோவிற்கும் அதிகமான, திருடப்பட்ட செப்புக் கம்பியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (9) ரம்புக்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் […]

கட்டானை தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: இளைஞர் பலி

கட்டான, கிம்புலப்பிட்டியவில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பண்டாரவளையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, அவர் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண் சரிவு எச்சரிக்கை இன்று (10) மாலை 04:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை – மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவுகள் கண்டி மாவட்டம்: பாதஹேவஹெட, பாததும்பர, ஹரிஸ்பத்துவ, தொலுவ, தும்பனை, பூஜாபிட்டிய, உடுநுவர, கங்காவட கோரளை, அக்குரண, மினிபே, […]

பருவமழை; மன்னாருக்கு முன்னெச்சரிக்கை

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. […]

மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும். இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு […]

பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், உயிரிழப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குதல், உட்கட்டமைப்பு சேதம் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் உடனடியாகவே செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தாலும், நிலப்பயன்பாட்டு ஒழுங்குவிதிகள், உள்ளூர் தயாரிப்புகள், மீட்பு உதவிகளின் வேகம் போன்ற துறைகளில் பலவீனங்கள் வெளிப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.