மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றமற்றவர் – நீதிமன்றம்

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் வாபஸ் பெற்றுக்காண்டதனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிகை வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதனால் பிரதிவாதிகள் குற்றமற்றவர்களாக அறிவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி மொஹம்மத் மிஹால் இன்று (10) உத்தரவிட்டார். 2011 ஆம் ஆண்டு […]

வெள்ள அனர்த்த பாதிப்பு: கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்பு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக்கொடுப்பனவு மற்றும் ரூபா 25000 கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்றைய தினம் (09.12.2025) பிரதேச செயலாளர்களுடன் நிகழ்நிலை ஊடாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் பின்வரும் விடயங்களும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. 1.யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு […]

த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை – பிரவீன் சக்கரவர்த்தி

“த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; தி.மு.க., கூட்டணியிலும் குழப்பம் இல்லை,” என, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்கிரசில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினரும், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, காங்கிரஸ் விரும்பும் […]

9 வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

பல்வேறு குளறுபடிகளால் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. போதிய விமானிகள் இல்லாத சூழலில் விமான சேவைகளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது. மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குறை கூறி வந்த நிலையில், அனைத்து குளறுபடிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் […]

திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இண்டி கூட்டணியின் எம்பிக்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது. இந்தக் கூட்டணியின் தலைமையான காங்கிரஸ் அவசரச் சடம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் […]

ராகுல் காந்தியை பா.ஜ கடும் விமர்சனம்

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. சுற்றுலாவுக்கான தலைவர் என்பதை ராகுல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டதாக விமர்சனம் செய்துள்ளனர். பரபரப்பாக நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது. இதில், வந்தே மாதரம் மற்றும் எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. எஞ்சியுள்ள நாட்கள் […]

சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: தீய சக்தி திமுகவை அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காக, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை கட்சியை கட்டி காத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரிய தலைவர்களுக்கு வாரிசு இல்லை. நாட்டு மக்களை தான் வாரிசாக […]

அம்பாறை மக்களால் நுவரெலியா மக்களுக்கு நிவாரணம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அம்பாறை மாவட்டம் தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில் மற்றும் விநாயகப்புரம் ஆகிய பகுதி உறவுகளின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் லெமெரியர், தங்ககலை, எல்ஜின், டயகம, வேவர்லி, சந்திரிகாமம், ராகலை, ரம்பொடை, கொட்டகலை மற்றும் நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 60 இலட்சம் […]

பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம்

ஹட்டன் – நோர்டன் பிரதான வீதிப் பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காசல்ரீ பகுதியில் உள்ள ஹட்டன் – நோர்டன் வீதிப் பாலம் கடும் சேதத்திற்கு உள்ளானது. பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அங்கு புதிய பாலம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, தற்காலிக இரும்புப் பாலம் ஒன்றைப் பொருத்துவதற்கான கட்டுமானப் பணிகள் இன்று (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை கண்டியில் அமைந்துள்ள பல்லேகெலே […]

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்தவர் உயிரிழப்பு!

‘நெடுந்தாரகை’ பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் ‘நெடுந்தாரகை’ பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் […]