சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(10)முன்னெடுக்கப்பட்டது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்திலும் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான […]
நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெலஉறுமய கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நெடுந்தீவு பிதேசத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழறுபடி நடந்துள்ளது. […]
பாடசாலைகளுக்கான கல்விச் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி சார் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான (இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர) 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் […]
புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது அறிவிப்பு
இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவையை எப்போது மீள ஆரம்பிப்பது என்று குறிப்பிட முடியாது. அந்தளவுக்கு புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன என்று புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார். நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள், பாலங்கள் தற்போது புனரமைக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக இராணுவ மற்றும் விசேட அனர்த்த செயற்பாட்டு மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்காக முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 39,000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைக்கு உதவி செய்ய வந்த ஐக்கிய அரபு ராச்சியம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ மற்றும் மீட்பு […]
ஜனாதிபதியை சந்திக்க வட மாகாண கடற்றொழிலாளர்கள் முயற்சி!
கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை மடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த சந்திப்பை நடத்த வேண்டும் என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து […]
மீண்டும் வருகிறார் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் வரும் 17-21ல் நடக்க உள்ளது. அடுத்த இரு போட்டிகள் மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2026, ஜன. 4-8) நடக்க உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து, தொடை பின்பகுதி காயம் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் விலகினார். இவருக்குப் பதில் ரெகுலர் கேப்டன், […]
‘மத்ஸ்யா 6000’; முதல் மனித ஆழ்கடல் பயணம்
முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார். ‘மத்ஸ்யா 6000’ என்பது இந்தியாவின் ‘சமுத்ராயன்’ திட்டத்தின் கீழ் ஆழ்கடல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்படும் ஒரு மனிதர்களை ஏற்றிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பலாகும். இது கடலின் 6000 மீட்டர் ஆழம் வரை சென்று, மூன்று நபர்களை ஏற்றிச் சென்று, ஆழ்கடல் கனிமங்கள் மற்றும் உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து […]
மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?
இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 25 வயதான கீனைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பார்சிலோனாவுடன் அவரது பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. அண்மையில் 13 போட்டிகளில் 2 கோல்களையே கீன் பெற்றபோதும் கழகங்களால் வேண்டப்படுபவராக கீன் இருக்கிறார்.
நியூயார்க் டைம்ஸ்; பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான்
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான் ஷாருக்கான் இந்தாண்டு நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அனைவரையும் கவர்ந்தன. இதையொட்டி அவர் 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூயார்க் டைம்ஸ் […]