மலையக மக்களுக்கு மட்டக்களப்பிலிருந்து உலர் உணவு…

மட்டக்களப்பில் உள்ள களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் மலையகத்தை புரட்டிப் போட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி இன்று வரை 627 பேர் உயிரிழந்ததோடு, 190 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

70 ரூபாவாக முட்டை விலை உயரும்?

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும். வெள்ளத்தில் சிக்கி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், […]

நெல் வயல்களில் குவிந்த மணல்களை அகற்ற நடவடிக்கை !

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த நெல் வயல்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை உடனடியாக அகற்ற, இலங்கை மகாவலி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம், பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மகாவலி C.B.D. II, ஹுருலுவெவ, ரம்புக்கன் ஓயா மற்றும் பிற பகுதிகளுக்கு உட்பட்ட நெல் வயல்களில் பயிர்செய்கையை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. […]

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றுக்கே உண்டு – ரணில் விக்கிரமசிங்க

நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள இடமளிக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முரண்பாடான இந்த விடயத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி உடனடியாக கட்சித் தலைவர்களை அழைத்து முடிவை எடுக்க வேண்டும். இப்போது அரச அதிகாரம் ஜனாதிபதி அலுவலகத்தாலோ அல்லது […]

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தம்பதி கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொருட்களுடன் இரண்டு விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெற்கு களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 30 வயதுடைய, திருமணமான தம்பதிகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் […]

அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இடி, மின்னலால் சேதம்

யாழில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்த வகையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்த இடி மின்னல் தாக்கம் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றது. இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகளுக்கு விசேட சலுகை

கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. புகையிரத பருவ டிக்கெட்டுகளை பயன்படுத்தி இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று அதன் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்

கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும் அதிகமாகப் பெய்யும் மழையினால் பல வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் லண்டனில் படுகொலை

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் […]

ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு

புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மேலும் தாமதமாகியுள்ளது. தற்காலிக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்மொழிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்த நியமனம் இன்னும் தாமதமாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்ற மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் ஜெயரத்னவின் பெயரை அங்கீகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திசாநாயக்க அரசியலமைப்பு பேரவையிடம் பரிந்துரைத்திருந்தார். எனினும் அதனை பேரவை நிராகரித்திருந்தது. முன்னதாக இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி பரிந்துரைத்திருந்த இரண்டு பெயர்களையும் பேரவை […]