தித்வா சூறாவளியால் புத்தளத்தில் 600 இறால் பண்ணைகள் சேதம்

நாட்டைத் தாக்கிய தித்வா சூறாவளியால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பல பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சனிக்கிழமை (06) கள விஜயம் மேற்கொண்டபோதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்த விஜயத்தின்போது அமைச்சர் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் அனுபவித்த சேதங்கள், உடனடி தேவைகள் மற்றும் எதிர்கால குறைகள் தொடர்பாக விரிவாக கேட்டறிந்தார். […]

சம்பியனான மெஸ்ஸியின் இன்டர் மியாமி

ஐக்கிய அமெரிக்க மேஜர் லீக் சொக்கர் (எம்.எல்.எஸ்) கிண்ணத் தொடரில் லியனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி சம்பியனானது. தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வன்கூவர் வைட்கப்ஸை வென்றே மியாமி சம்பியனானது. மியாமி சார்பாக றொட்றிகோ டீ போல், தடியோ அலென்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. இரண்டு கோல்களைப் பெறுவதற்கான பந்துப் பரிமாற்றங்களை மெஸ்ஸி வழங்கியிருந்தார். […]

இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, பிறிஸ்பேணில் வியாழக்கிழமை (04) ஆரம்பித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இங்கிலாந்து இங்கிலாந்து: 334/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 138, ஸக் குறோலி 76, ஜொஃப்ரா ஆர்ச்சர் 38, ஹரி ப்றூக் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 6/75, மைக்கல் நேஸர் 1/43, பிரெண்டன் டொக்கெட் 1/81, […]

3 ஆம் நிலை வெளியேற்ற எச்சரிக்கை

நிலவும் அவசர நிலைமை காரணமாக பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்கள் கண்டி மாவட்டத்தில், கங்கை இஹல கோரளை, தும்பனை, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை, உடுநுவர, தொழுவ, உடுதும்பர, பாதஹேவஹெட்ட, ஹரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட கோறளை, பஸ்பாகே கோரளை, பன்வில, ஹத்தரலுவ, யத்தறலுவ, பத்தரலுவ, பத்தறவ, தெல்தோட்டை, பூஜாபிட்டிய மற்றும் உடபலத. கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹபிட்டிய, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கேகாலை ஆகிய […]

நீர்ப்பாசனத்துறை அவசர நடவடிக்கை

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை மீட்டெடுக்க நீர்ப்பாசனத் துறை அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது நெல் வயல்கள் மற்றும் பிற சாகுபடி நிலங்களுக்கு நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பாதுகாக்க தற்காலிக மறுசீரமைப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன (நீர்யியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர், விவசாயிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மறுசீரமைப்புப் பணிகளுக்கு […]

அரசு உண்மையாகச் செயற்படுகிறதா? – நாமல்

சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க வாக்குறுதிகள் உண்மையான உதவியாக மாறுவதைக் கண்காணித்து, விவாதித்து, உறுதிசெய்ய, உடனடியாக பாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

பாடசாலைகளுக்கு சிக்கல்?

பன்விலை நகரம், திங்கட்கிழமை (08) முதல் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அமைப்பு முறையில் ( System ) சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு இயங்காமலிருந்த மக்கள் வங்கி முதல் இயங்குவதோடு தானியங்கி சேவையும் வழமைக்குத் திரும்பியுள்ளது. கண்டி -வத்தேகம மற்றும் திகன பிரதேசங்களுக்கு பஸ் போக்குவரத்துகள் இடம் பெறுவதோடு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. வியாபார நிலையங்களும் இயங்கத் தொடங்கியுள்ளன தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலிருந்து போதுமானளவு மரக்கறிகளும் கொண்டு வரப்பட்டு வியாபார நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.தொலைத்தொடர்பு […]

மிகக் குறுகிய காலத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிடைக்கும் வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மிகக் குறுகிய காலத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் பத்து சதவீதத்தினரும் விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக நிர்வகித்து, புதிய […]

மருந்துப் பொருட்கள் வீணாக்கப்படுவதை தடுக்க அறிவுறுத்தல்

மருந்துப் பொருட்கள் வீணாக்கப்படுவதை தடுக்க முன் அனுமதி பெறுமாறு சுகாதார அமைச்சு நன்கொடையாளர்களை அறிவுறுத்துமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை பரிந்துரைத்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள மருந்துப் பொருட்கள் திரும்பவும் கிடைப்பதை தடுக்கும் என அதிகாரசபை நம்புகிறது. பங்களாதேஷ் மற்றும் மியான்மாரில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களை அதிகாரசபை பெற்றுள்ளது, மேலும் அவற்றை அங்கீகரித்து விநியோகிப்பதற்கு முன்பு அவற்றின் தேவையை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை தலைவர் டாக்டர் ஆனந்த […]

மீண்டும் அம்புலுவாவ மலையில் பாரிய அனர்த்தம்?

அம்புலுவாவ மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமங்கள் மீண்டும் மண்ணில் புதையுண்டு போகலாம் என கம்பளை பிதேசத்தின் செயலாளர் ஆத்மா தில்ருஷி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். பிரதேச செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மண்சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து பாரிய அழிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் மீண்டும் அறியத் தருகின்றோம். மண்சரிவு […]