வேலை அனுமதி காலவரம்பு அமெரிக்காவில் குறைப்பு?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது அமெரிக்காவில் வேலை அனுமதிக்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாக குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியேற்றக் கொள்கை சீரமைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடைக்கலம் கோருபவர்கள், அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் உட்பட பல புலம்பெயர்ந்த குழுக்களுக்கான குடியேற்ற விதிகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி ஆவணங்களின் […]
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள் விடுவிப்பு
கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவிலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றில் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் கடத்தி சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் மேலும் 100 மாணவர்கள்விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட 100 மாணவர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபூஜாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நைஜர் மாநில உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விடுவிக்கப்பட்ட 100 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன், பின்னர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி […]
மெல்போர்ன் முதல் கொழும்பு வரை புதிய விமான சேவை
2026 ஆகஸ்ட் முதல் முறையாக மெல்போர்ன் முதல் கொழும்பு வரை மூன்று வாராந்த விமானங்களுடன் ஜெட்ஸ்டார் நிறுவனம் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண இடைநில்லா சேவையை வழங்கும் நிறுவனமாகும். இதன்படி ஜெட்ஸ்டார் தனது முதல் தெற்காசியாவுக்கான சேவையாக, இலங்கைக்கு குறைந்த கட்டண இடைநில்லா சேவையையும் தொடங்க உள்ளது. 2026 ஆகஸ்ட் 25ஆம் அன்று இந்த சேவை மெல்போர்னில் இருந்து இலங்கைக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் மெல்போர்ன் […]
14 வயது சிறுவனைக் காணவில்லை
ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் 14 வயதுடைய சிறுவன் கடந்த 05.12.2025 வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள CCTV காட்சிகள் பதிவாகியுள்ளன. எனவே சிறுவனை கண்டு பிடித்துத்தருமாறு உறவுகளினால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் […]
புயல் எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதனை தெரிவிக்கத் தவறியமைக்காக எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடர வேண்டும்
எதிர்க்கட்சியினர் கடந்த நவம்பர் 12ஆம் திகதி முதலே புயல் எச்சரிக்கை குறித்து அறிந்திருந்ததாகக் கூறி மௌனம் காத்திருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நவம்பர் 12ஆம் திகதி முதல் புயல் எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதனை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தவறியமைக்காக எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், புயல் வரவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களமோ அல்லது நீர்ப்பாசனத் திணைக்களமோ […]
பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், வலுவான நீருள்ள இடங்களில் இறங்குவதையோ அல்லது குளிப்பதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார். ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் அவசரப் பிரச்சினைகள் இருந்தால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களான 117 க்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதிக மழையினால் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் […]
அமெரிக்க விமானம் நிவாரண பொருட்களுடன் பலாலிக்கு வந்தது!
நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதுளை – கிளன் அல்பின் தோட்ட மக்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை!
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பதுளை, கிளன் எல்பின், அலுக்குவத்தை தோட்ட மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் அவர்களை சென்றடையவில்லை. தங்களுக்கென கொண்டு வரப்படும் நிவாரண பொருட்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என மக்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். கிளன் அல்பின் தோட்ட மக்கள் தெரிவிக்கையில், 165 குடும்பங்கள் இருக்கின்றோம். பலத்த மழை பெய்தமையினால் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளது. எங்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை. தோட்ட முகாமைத்துவ அதிகாரி மற்றும் […]
சுமார் ஒரு இலட்சம் வரையிலான மாணவர்கள் பாதிப்பு
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாடசாலைகள் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார். ஏதோ ஒரு வகையில் சுமார் 100,000 மாணவர்களும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், டிசம்பர் 16 அன்று பேரிடரால் கடுமையாக பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தெந்தப் பகுதிகள் மற்றும் எந்தெந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இன்று (08) […]
யாழில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு C130J Super Hercules விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. குறித்த விமானங்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின. இந்நிலையில் வடபகுதிக்கான நிவாரணங்களை பொருட்களை ஏற்றிய அமெரிக்கா விமானம் ஒன்று இன்று காலை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த […]