நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் […]

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு நினைவுத்தூபி சேதம்!

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார். செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாக செம்மணியில் புதிதாக நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் இனந் தெரியாதோரால் […]

இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

மத்திய ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வாழைச்சேனை காவல் பிரிவில் உள்ள பொலன்னறுவை-பட்டிகல்பூ பிரதான சாலையின் 20வது தூண் அருகே உள்ள பகுதியில் திங்கட்கிழமை (08) அன்று காலை, சோதனை நடத்தி, தொலைபேசி கம்பத்தின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளை மீட்டுள்ளனர். ஒரு மைக்ரோ வகை பிஸ்டல், 04 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவால்வரை மீட்டு வாழைச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்ய வாழைச்சேனை காவல் […]

தி.மு.க. அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் போராட்டம்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் ஹிந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில், ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி […]

தமிழகத்தில் பருவமழை பெய்தும் நிரம்பாத நீர்த்தேக்கங்கள்

வடகிழக்கு பருவமழை கொட்டியும், 16 அணைகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டிஉள்ளன. தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., இவற்றில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள், கொள்ளளவில் பெரியவை. இவற்றின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., மற்ற அணைகள் 1 டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு உடையவை. அதிக மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான், பெரும்பாலான அணைகள் உள்ளன. இவற்றுக்கு தென்மேற்கு பருவமழை […]

பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அவமதிப்பு?

”பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல,” என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா, இந்தாண்டு ஆக.,13ம் தேதி நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி, பட்டச்சான்றுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். அப்போது முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப், கவர்னர் ரவியிடம் பட்டம் பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச்சான்றை காட்டி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அனைவரது முன்னிலையில் […]

திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி

” அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி” என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் நேரு மீதான ரூ.1020 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழக போலீஸ் டிஜிபிக்கு, அமலாக்கத்துறையினர், இரண்டாம் முறையாக கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் […]

கட்டணத்தை திருப்பி கொடுக்கும் இண்டிகோ நிறுவனம்

விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையினால் பயணச்சீட்டு கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி கொடுத்து வருகிறது. விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாமையினால் அந்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த […]

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலை?

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 3 வயது சிறுமி உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது. லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள டெர்மினல் 3 கேரேஜில், நான்கு ஆண்கள் கொண்ட குழு, ஒரு லிஃப்டில் இருந்த […]

கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்

தாய்லாந்து, கம்போடியா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் காரணமாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் வின் தாய் சுவாரி இன்று (08) தெரிவித்துள்ளார். எல்லையில் கம்போடியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாய்லாந்து வீரர் ஒருவர் […]