சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு
நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ஷங்கரவரபிரசாத் காரு எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையாமல் இருக்கின்றன. இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் […]
பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு
தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சாமிகா கருணாரத்னவின் வழக்கறிஞர், ஆட்சேபனை தெரிவித்தார். கருணாரத்ன தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவ்வாறு செய்யாவிட்டால், குழந்தைக்கு பராமரிப்பு வழங்க உத்தரவிடக் கோரி பெண் விமானி தாக்கல் செய்த வழக்கில், புகார்தாரரின் வழக்கறிஞர் டி.என்.ஏ பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்தபோது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சாமிகா கருணாரத்ன, 100,000 ரூபாய் பிணையில் […]
பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்
முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான் பிறீயைத் தொடர்ந்தே 423 புள்ளிகளைப் பெற்று பிரித்தானியாவின் நொரிஸ் சம்பியனானார். றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் நொரிஸை விட 2 புள்ளிகளே குறைவாக 421 புள்ளிகளைப் பெற்றதோடு, நொரிஸின் சக மக்லரன் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி 410 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அபு தாபியில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் முதலாமிடத்தைப் பெற்றிருந்தார். பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த […]
செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்
ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது. செல்டா விகோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வில்லியொட் ஸ்வெட்பேர்க் பெற்றிருந்தார். இதேவேளை வலென்சியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், செவிய்யாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹியூகோ டுரோ பெற்றதோடு, செவிய்யா சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் […]
மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ள நீர் ஆலைக்குள் நுழைந்ததாலும், குளிர்பதன வசதியை சீர்குலைத்ததாலும் இந்த இறைச்சி மோசமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை ஹாட்லைனில் (1926) அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. […]
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?
நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளின்படி, எந்த நீர்த்தேக்கமும் வெள்ள மட்டத்தில் இல்லை என்று நீர்ப்பாசன பணிப்பாளர், நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 50-100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, களனி மற்றும் களு கங்கைப் பகுதிகளில் 50-100 மி.மீ […]
டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1,421 ஹெக்டயர் காய்கறி பயிற்செய்கைகள் சேதமடைந்துள்ளன.இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடியாக […]
கால்வாய்களை சீரமைக்கும் பணி
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான அனர்த்தம் நிகழ்ந்த இடங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாகவேனும் சீரமைத்து, நீரை திறந்து விடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட நெல் வயல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த […]
மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (08) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை […]
பாதகமான வானிலை; சேதமடைந்த இணைப்புகளை சேதப்படுத்த வேண்டாம்
தற்போதைய பாதகமான வானிலை காரணமாக பல பகுதிகளில் சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டயலொக் ஆக்சியாட்டா, பொலிஸ் மா அதிபர் மூலம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது நாட்டின் பல பகுதிகளை பாதித்த கடுமையான பேரிடர் சூழ்நிலையின் விளைவாக, பொது இடங்களில் ஃபைபர் ஆப்டிக் மற்றும் செப்பு கம்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை பழுதுபார்க்கும் பணிகளின் போது சில நிலத்தடி கேபிள்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலைமை […]