மதஸ்தானங்கள் புனரமைப்புக்கு ஹஜ் குழு நிதி

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்காக ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா திங்கட்கிழமை (08) புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதுதொடர்பான காசாேலை ஹஜ் குழுவின் தலைவர் பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லாரினால் புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹனிதும சுனில் செனவியிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்துகாெண்டிருந்தனர்.

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஆடை மாற்றிப் பார்க்கும் அறையில் கேமரா; உரிமையாளர் கைது

ஆடை மாற்றிப் பார்க்கும் (ஃபிட்டோன்) அறையில் கேமரா ஒன்றை மறைத்து வைத்து, பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளியாகப் பதிவு செய்த குறித்த கடையின் உரிமையாளர் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்ட சம்பவம் தலவத்துகொட நகரில் உள்ள தைக்கப்பட்ட ஆடை வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரைக் கைது செய்து அவரது தொலைபேசியை சோதனையிட்டபோது, குறித்த அறையில் பதிவாகிய 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணொளிகளில் வயோதிபப் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது […]

2026 ஆம் ஆண்டுக்கான ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாககின்றது. ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்று திங்கட்கிழமை (08) அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபையின் வருமானம் […]

வாளுடன் வட்டுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) வாளுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி நகரம். இங்கு இன்று (டிச 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக நிநலடுக்கம் பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை இரண்டையும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட […]

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார். ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய போலி சட்டத்தரணி ஒருவரை கடந்த நவம்பர் 8ம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றில் […]

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண […]

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார். கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து […]