முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் தீ விபத்து; 23 பேர் பலி

இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நள்ளிரவில் ஆர்போரா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று (7) அதிகாலை தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இன்று கோவாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் வேதனையான நாள். ஆர்போராவில் ஏற்பட்ட பெரும் […]

எச்சரிக்கை அறிவிப்பு

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. பலத்த மின்னல் ஏற்படுவது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீவின் சில பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது * மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள். * இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னலால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு […]

இந்தியாவிடமிருந்து 9 ஆவது நிவாரணப் பொதி

இந்தியாவிடமிருந்து அனுப்பப்பட்ட 9 ஆவது மனிதாபிமான உதவிப் பொருள்கள், நேற்று பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. அவசர உதவியின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு விமானம் 65 மெட்ரிக் தொன் எடையுள்ள 110 அடி நீள பெய்லிப் பாலத்தையும், ஒரு ஜே.சி.பி. பெக்கோ லோடர் இயந்திரத்தையும் ஏற்றி வந்தது. இந்த பொதியுடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையைச் சேர்ந்த 13 பொறியியலாளர்கள் உதவி வழங்குவதற்காக வந்துள்ளனர். இந்த நிவாரணப் பொதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்காக, […]

புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் வேண்டுமென கோரிக்கை

தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடத்தை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விடின் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு தபால் நிலையத்திற்கு சொந்தமான அரச காணியிருந்தும் 13 வருடங்கள் கடந்தும் இதுவரை எதுவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் நேற்றையதினம் (06.12.2025) காலை தபால் ஊழியர்கள் குறித்த காணியினை துப்பரவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து, குறித்த பணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]

பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்: வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 […]

தேயிலைத் தொழில் கடுமையாகப் பாதிப்பு

கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, தேயிலைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேதமடைந்த இயந்திரங்களை பழுதுபார்க்க வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருப்பதாலும், வீதிகளில் ஏற்பட்ட சேதம் தேயிலை ஏற்றுமதியை பாதிக்கக்கூடும் என்பதாலும், இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரி லுசாந்த டி சில்வா கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையை மிரள வைக்கும் அநுரவின் நண்பன்.. வெகு விரைவில் அதிரடி மாற்றம்! இலங்கையை […]