அமெரிக்காவின் யுகோன் பகுதியில் நில நடுக்கம்

வட அமெரிக்காவின் யுகோன் பகுதியில் 7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வடஅமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் தகவல்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குழுங்கின. […]

துபாயில் உலகின் மிக உயரமான ஹோட்டல் திறப்பு

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் வானளாவிய உயரத்துக்கு கட்ட திட்டமிடப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், ‘சீல் டவர்’ என்ற பெயரில் வானுயர ஹோட்டல் ஒன்றை, ‘இம்மோ பிரஸ்டீஜ் லிமிடெட்’ என்ற நிறுவனம் திறந்துள்ளது. கண்ணாடி மாளிகை இந்த ஹோட்டலை, ‘தி பர்ஸ்ட் குரூப்’ என்ற கட்டுமான நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது. […]

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை புடின் வருகை பாதிக்காது

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இரண்டு நாள் இந்திய விஜயம், நடந்து வரும் இந்தியா – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கும் என்ற கருத்தில் உடன்படவில்லை என வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியாக தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், புடினின் வருகை இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்கும் என்ற கருத்தில் நான் உடன்படவில்லை. உலகின் அனைத்து முக்கிய நாடுகளுடனும் இந்தியா நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளுடன் நமது […]

நாட்டுக்குப் பெருந்தொகை நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இக்கடினமான நேரத்தில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவி, பல ஆயிரக்கணக்கான பேரிடர் பாதித்த குடும்பங்களுக்கு மிகத் தேவையான நிவாரணமாக அமையும். இது முதலாவது உதவி அல்ல என்பதை இலங்கை மக்கள் சார்பாக […]

கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 81 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் 1,800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 870 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணவில பாலத்தினை புனரமைக்க இந்திய இராணுவம் உதவி

பேரிடரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பல்வேறுபட்ட நிவாரண உதவிகள் கிடைத்தவண்ணமுள்ளன. உதவிகளின் ஒரு பகுதியாக இரணவில பாலத்தினை புனரமைக்க இந்திய இராணுவத்தின் உதவி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. C.G.Prashanthan

தொடருந்து சேவை; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில், தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இந்தப் பிரச்சினையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் தொடருந்து […]

பலத்த மழை; டிசம்பர் 14 வரை இலங்கைக்கு ஆபத்து

இலங்கை முழுவதிலும் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே, இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல […]

மாத்தளையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மாத்தளை, கூம்பியன்கொட ஸ்ரீ வித்யாசேகர விகாரைக்கு நேற்று (06) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்குள்ளவர்களிடம் நலன் விசாரித்தார். இதன்போது மக்கள் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்ததுடன், தமக்கு வசிப்பதற்காக வேறு இடங்களில் காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் இழப்பீடு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார்.

புயலால் 221 கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில்”டித்வா” புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 221 பாடசாலைகள் பாதிக்கபட்டுள்ளது என்று மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து ஆளுநர் நேற்று(6) ஊடகங்களுக்கு தகவல் வழங்கினார்.அதன்படி மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய 15 கல்வி வலயங்களில் மொத்தமாக 221 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை வலய ரீதியாக வருமாறு திருகோணமலை மாவட்டம் மூதூர் வலயம் -25 கந்தளாய். – 15 கிண்ணியா. […]