செர்னோபில் அணு உலை பாதுகாப்பு கவசத்துக்கு சேதம்?

சேதமுற்ற செர்னோபில் அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பாதுகாப்பு கவசம், ரஷ்யா- உக்ரைன் போரில் சேதம் அடைந்துள்ளது. உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. கதிர் வீச்சு வெளியாகி ஏராளமானோர் உயிரிழந்தனர். அந்த பகுதியே மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இரும்புத்திரை நாடாக இருந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதனால், அணு உலை வெடி […]

இந்தியாவுக்கு எதிராக எதிர்மறையான டிரம்ப்பின் செயல்பாடுகள்; பின்னணியில் பாகிஸ்தானா?

அமெரிக்க அதிபர் டிரம்பின் திறமையின்மையால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்று வருவதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு பாதிக்கும் வகையிலான அதிபர் டிரம்பின் செயலால் அமெரிக்கர்கள் திகைத்து போயுள்ளனர். டிரம்பின் இந்த செயல் மக்களுக்கு பல்வேறு கேள்விகளை எழச் செய்கிறது. ஒருவேளை பாகிஸ்தானின் மிகையான புகழ்ச்சியா? அல்லது பாகிஸ்தானியர்கள் அல்லது துருக்கி மற்றும் கத்தாரில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் […]

இயற்கை அனர்த்தாத்தால் பாதிக்கப்பட்டவர் எருமை தாக்கியதில் பலி

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை எருமை மாடு தாக்கியதில் உயிரிழந்தார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொலன்னறுவை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனம்பிடிய மகந்தோட்டையைச் சேர்ந்த ரோஷன் குமாரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார். […]

அமெரிக்காவில் வீட்டில் தீ பற்றியதால் இந்திய மாணவி உயிரிழப்பு

அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீயால் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய மாணவி உயிரிழந்தார். தெலுங்கானாவைச் சேர்ந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா, அமெரிக்காவின் நியூயார்க், அல்பானி நகரில் வசித்து வந்தார். சஹஜா மூன்று ஆண்டுகளுக்கு முன் சைபர் செக்யூரிட்டியில் ( இணைய பாதுகாப்பு) முதுகலைப் பட்டம் பெற அமெரிக்கா சென்றார், சில மாதங்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்தார். அவரது தந்தை ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் அவரது தாய் ஒரு ஆசிரியர். டிசம்பர் […]

இங்கிலாந்தில் மருத்துவர் மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு!

இங்கிலாந்திலுள்ள முக்கிய வைத்தியசாலைகளில் பணிபுரியும் போது 38 நோயாளர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 38 வயதான மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது 15 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், 17 தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்; தெரிவிக்கின்றன. 2017 மற்றும் 2021 க்கு இடையில், ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் மற்றொரு வைத்தியசாலைகளில் […]

கொலைக் குற்றவாளி ஹமீது நசீரை நாடு கடத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல்

அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பால் தேடப்படும் குற்றவாளி ‘ ஹமீத் நசீரை கைது செய்து, நாடு கடத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் வசித்த ஹனுமந்த் நாராவுடன், ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர் ஹமீது நசீர். இருவரும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்தனர். ஹனுமந்த் நாராவின் மனைவி சசிகலா மற்றும் அவரது 6 வயது மகன் 2017ல் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, அமெரிக்க போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஹமீது நசீர் தான் அவர்கள் […]

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம்!

புதுச்சேரியில், நாளை மறுதினம் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு, பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதாக போலீசார் கூறினர். எனவே, நாளை மறுதினம், உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு, த.வெ.க.,வினர் மனு அளித்தனர். இதையடுத்து, டி.ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் ஆகியோர் அந்த மைதானத்தை […]

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் நிபந்தனை!

‘ஆட்சியில் பங்கு தர வேண்டும்; இல்லையெனில், 5 ராஜ்யசபா எம்.பி. பதவி தர வேண்டும்’ என்று காங்கிரஸ் மேலிடம் விதித்துள்ள நிபந்தனையால் தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் பெரும்பான்மை பெறாவிட்டாலும், ராஜ்யசபாவில் அதிக எம்.பி.க்கள் உள்ள கட்சியாக இருந்தது. இதனால், பார்லிமென்டில் மத்திய அரசுக்கு சுலபமாக இடைஞ்சல் உண்டாக்க முடிந்தது. ஆனால், இப்போது கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால் 245 எம்.பி.க்களை […]

 தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக போராடியவர்கள் உள்ளாட்சி நியமனத்தில் புறக்கணிப்பு?

உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் ஜான்சி ராணி வெளியிட்டு உள்ள அறிக்கை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக, 3,631 மாற்றுத்திறனாளிகளை நியமித்து, முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி. இது, மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்கிறது. இருப்பினும், எங்களது பிரதான […]

நாட்டின் இரு வேறு பகுதிகளில் வாகன விபத்துக்கள் : இருவர் பலி!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (6) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – குடியிருப்பு வீதியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், 10 வயது சிறுவன், மற்றொரு பெண் என மூவர் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் […]